உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆண்டாள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

ஆண்டாள்


நிலை சிறந்தது என ஆழ்வார்கள் பாடல்கள் வற்புறுத்துகின்றன. இதற்குக் காரணங்களை ஶீமணவாள மாமுனிதள் நன்கு விளக்குகின்றார். அப்போதே நீர் பருக வேண்டுமென்ற தாகவிடாய் உடையவனுக்குக் கொட்டும். குந்தாலியும் கொண்டும் கல்லினால் அல்லது குடிக்கக் கிடையாதபடி பூமிக்குள் பதிந்து கிடக்கும் நீர் பயனற்றது அல்லவா? அவ்வாறுதான் அந்தர்யாமித்வம்'. பூமிக்கு வெளியே பெருகிக் கிடக்கிற ஆவரண நீர் போன்றது 'பரத்வம், அந்த நீரும் குடிக்க உடனே கிடைக்காது. பூமியில் இருந்தாலும் பாற்கடல் நீர் கிட்டாததொன்று அது போன்றது வியூக நிலை.

'அவதாரங்கள் பெருக்காறுகளை பெருமழை போன்றவை. அந்தந்தக் காலத்தில் அவ்வப்போது பொழிந்து பயன் அளித்தவை. அவதாரத்தைப் பெருமழையாகக் கொண்டால் அந்த மழைநீரைத் தேங்கச் செய்து பின்னாளிலும் மக்களுக்குப் பயன்படுத்திக் கொண்டிருந்த நீர்நிலையாகக் கோயில்களையும், கோவில்களில் உள்ள உருவங்களையும் கருத வேண்டும். அதுவே கண்ணுக்கிலக்காக நின்று பய்ன் தருவது என்பது கருத்து. -

ஈண்டுத் தோன்றிய ஆழ்வார்கள் மரணமிலாப் பெருவாழ்வு படைத்தோர்; (நித்ய சூரிகளின் அமிசம்): இவர்கள் இறைவனாம் திருமாலால்' மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர்கள் திருமாமகள் கேள்வனைத் தமது நெஞ்சமென்னும் உள்ளக் கண்ணால் கண்டு மகிழ்ந்தவர்கள்; அந்த அனுபவம் உள்ளத்தே அடங்கப் பெறாமல் பெருக் கெடுத்துப் புறம்பே வழியச் செல்லால், பாமாலைகளால் பெருமானுக்குச் சூட்டிப் பரவசப்பட்டவர்கள். இவர்களின் பாடல்கள் 'அருள்கொண்டு ஆயிரம் இன்தமிழ் பாடினான்' என்று கூறும்வண்ணம் இறையருளால் இசைக்கப் பெற்றவை ஊனக் கண்ணால் இறை வீற்றிருக்கும் மூர்த்தங்களைக் கண்டு, ஞானக் கண்கொண்டு அவற்றை இறைவலிமையாலே இன்ப மயமாக்கி, இறுதியில் இறைவனுக்கே இன்பக் களிப்பூட்டும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/32&oldid=954821" இலிருந்து மீள்விக்கப்பட்டது