பக்கம்:ஆண்டாள்.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். சி. பா.

31


வண்ணம் அமைந்தவை. இத்தகு பக்திப் பூங்காவாக ஆழ்வார் களைக் கொள்ளலாம்.

ஆண்டாள்

அந்தப் பக்திப் பூங்காவில் மலர்ந்து நல்ல மணம் வீசி வையம் புகழ வாழ்ந்த பெண்கொடியே ஆண்டாள் ஆவார். இவர் பெரியாழ்வாரின் பெண் கொடியெனத் திகழ்ந்தவர். இவள் கமலமுடன் வில்லிபுத்துார் விளங்கவந்த விளக்காவாள்; காரார் நற்றுழாய்க் கானத் தவதரித்தவள்; விமலமாந் திருஆடிப்பூரத்தாள்; விட்டுணுசித்தர் வளர்த்தெடுத்த விளங்கிழையாள்;அமலை திருப்பாவை ஐயாறளித்தருளியவள்: ஆக நூற்றெண்ணைந்து மூன்றுரைத்தவள்; அமுதனாம் அரங்கனுக்கே மாலையிட்டவள்.

ஆண்டாளுடைய பெருமை அளவு கடந்தது. இறைவனுக்கே பணிபூண்ட ஆழ்வார்களில் ஒருவராயும், இறைவனுடைய தேவிமார்களில் ஒருத்தியாயும் இருக்கும் இருப்பு இவளுக்கே உரியது.

ஆழ்வாராய்க் கொண்டு பாமாலை சூட்டியும், தேவியாய்க் கொண்டு பூமாலை சூடியும் அநுபவித்த தனி அனுபவம் ஆண்டாள் ஒருத்தி உடையதே என்பது உண்மை.89 (திருப்பாவை மாலை). பூமாலையைத் தாம் அணிந்து பெருமாளுக்கு அணிவித்த ஆழ்வாரும் இல்லை; பாமாலை சூட்டிய தேவியும் இல்லை. ஆதலால்தான் இருடிகளுக்கும் ஆழ்வார்களுக்கும் எத்தனை வாசியோ அத்தனை வாசி ஆழ்வார்களுக்கும் ஆண்டாளுக்கும் என்று பூர்வசாரியர்கள் வியந்து போற்றினர்.

பெரியாழ்வார் பெண்பிள்ளையாய் ஆண்டாள் பிறந்த
திருவாடிப் பூரத்தின் சீர்மை-ஒருநாளைக்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/33&oldid=957492" இருந்து மீள்விக்கப்பட்டது