பக்கம்:ஆண்டாள்.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34 ஆண்டாள்

பிள்ளைகளெல்லாம் பாவைக் களம் புக்கார்
வெள்ளி யெழுந்து வியாழ முறங்கிற்று
புல்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்.19

-திருப்பாவை 13:3-5

என்னும் அடிகளில் 'வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று' என்ற ஒரு குறிப்புக் கிடைக்கின்றது. இந்தக் குறிப்பினை ஆராய்ந்து மு. இராகவய்யங்கார் "கி.பி. 716 ஆம் ஆண்டு திருவாடிப்பூரத்தில் ஆண்டாள் அவதரித்தாள் என்றும், கி.பி. 731இல் அதாவது தமது பதினைந்தாவது வயதில் திருப்பாவையை இயற்றினார்" என்றும் கூறுகின்றார் 50 (மு. இராகவையங்கார், ஆழ்வார்கள் காலநிலை, ப. 81) 'இந்தக் கருத்தினையே இலக்கிய சாசன வழக்காறுகள் மீண்டும் வலியுறுத்துகின்றன.51 (மு. இராகவையங்கார், இலக்கண சாஸன வழக்காறுகள், ப 125).

இவருடைய கருத்தினையே ஈ. எஸ். வரதராஜ அய்யர்52 (தமிழ் இலக்கிய வரலாறு, பக். 283-284), இ. தேனையா53 (ஶீவில்லிபுத்துார் தல வரலாறு. பக். 48-49). பண்டித பு. ரா. புருஷோத்தம நாயுடு.54 (கலைக்களஞ்சியம் தொகுதி 1, ப. 362) ஆகியோர் ஏற்றுக்கொண்டனர்.

டாக்டர் ந. சுப்புரெட்டியார் அவர்கள் ஆண்டாள் வாழ்ந்த காலம் கி. பி. 850 ஐச் சுற்றிய ஆண்டுகளாகக் கொள்வர்.55

நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை வெளியிட்ட மயிலை மாதவதாசன் "வெள்ளியெழிந்து வியாழ முறங்கிய" நான்கு காலங்களைக் கணக்கிட்டுத் திருப்பாவை பாடிய காலம் கி. பி. 885ஆம் ஆண்டென வரையறுத்துக் கூறுகின்றார்." (நாலாயிரதிவ்ய பிரபந்தம், ப. 45) பாலூர் கண்ணப்ப முதலியார் பெரியாழ்வார் வாழ்ந்த காலம் மதுரையில் ஆட்சி புரிந்த வல்லபதேவன் காலமாகிய ஒன்பதாம் நூற்றாண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/36&oldid=957504" இருந்து மீள்விக்கப்பட்டது