பக்கம்:ஆண்டாள்.pdf/45

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். சி. பா.

43


என்னும் பெயர் பெற்றார். திருப்பாவை இந்தப் பாவையின் வாயால் மலர்ந்ததைத் தெரிகின்றோம்.

பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்
வேதம அனைத்திற்கும் விக்தாகும்---கோதைதமிழ்
ஐயைந்து ஐந்தும் அறியாத மானுடரை
வையம் சுமப்பது வம்பு67

-

--திருப்பாவைத் தனியன்

என்ற வெண்பா இதன் சிறப்பினை எடுத்துக்காட்டும். இன்றைய சொற்பொழிவில் முன்னுரையில் விளக்கம் பெற்ற 'அர்த்த பஞ்சகஞானம் திருப்பாவையில் நன்கு எடுத்துக் காட்டப்படுகின்றது. ஆன்மாவின் இயல்பு, இறைவியல்பு. ஆன்மா அடையும் பயன், அப்பயனை அடைவதற்கு நெறி, அப்பயனை அடைவதற்குப் பகையாய் உள்ளவை ஆகியவற்றை முறையாகத் திருப்பாவையில் விளக்கம் பெறுவதை நோக்கலாம்.68 இதன் விரிந்த விளக்கம் நாளையும் மறுநாளும் விரிவடையும்.

ஆண்டாள் நாயகனைச் சேர்தல்

மகளுடைய அன்றாடத் தவிப்பினை உணர்ந்து பெரியாழ்வார் இவரையணுகிக் கேட்டார். மனத்திலுள்ளதை மறைக்காமல் கூறும்படி வேண்டினார். ஆண்டாளும் முதலில் தயங்கிப் பின்னர், தேர்ந்து தெளிந்து, மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன் என்று சொல்லி, திருவரங்கனையே மணக்கத் தாம் உறுதிபூண்டிருப்பதைத் தம் தந்தையாருக்குத் தெரிவித்தார். தாம் மணக்க விரும்பிய தலைவன் நாயகன்----அழகை மனக் கண்முன் கணடு களித்தார். என் அரகத்து இன் அமுதர், குழல் அழகர், வாய் அழகர், கண் அழகர், கொப்பூழில் எழுகமலப் பூ அழகர்' என்று உருவகப்படுத்தி மகிழ்ச்சி கொண்டார். பொங்கு ஒதம் சூழ்ந்த :புவனியும் விண்ணுலகும், அங்காதும் சோராமே ஆள்கின்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/45&oldid=957617" இருந்து மீள்விக்கப்பட்டது