பக்கம்:ஆண்டாள்.pdf/46

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

ஆண்டாள்


எம் பெருமான், செங்கோலுடை திருவரங்கச் செல்வனார்’ என்று உடல் பூரித்தார்.

அப்போது மதுசூதனன் தம்மைக் தைத்தலம் பற்றிக் கடிமணம் புரியக் கனவு காண்கின்றார்; ஆயிரம் யானைகள் புடைசூழ அழகான மணப்பந்தருக்குள் கோவிந்தன் வருகின்றான். இந்திரன் முதலான தேவர்கள் வந்து புடைசூழ நிற்கின்றார்கள். மத்தளஒசையும், சங்கொலியும் முழங்குகின்றன. ஆண்டாள் பட்டுடுத்திப் பாங்காக மணமேடைக்கு வருகின்றார். திருமணச் சடங்குகள் நடை பெறுகின்றன.

திருவரங்கன் இவரின் மலர்க்கரம் பற்ற இருவரும் தீயை வலம் வருகிறார்கள். அரங்கனே இவர் காலைத்தொட்டுத் துரக்கி வைத்து அம்மி மிதிக்கச் செய்கின்றான். அடுத்து,

அரிமுகன் அச்சுதன் கைம்மேலென் கைவைத்துப்
பொரிமுகத் தட்டக் கனாக் கண்டேன் தோழீ! நான்
அங்கவ னோடும் உடன்சென்றங் கானைமேல்
மஞ்சன மாட்டக் கனாக்கண்டேன் தோழீ! நான்59
-நாச்சியார் திருமொழி.

என்ற தோழியர் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு செய்தியைச் சொல்லிக் களிக்கின்றார்.

"பெரும்பெத்த கண்ணாலங்கள் செய்து
பேணி நம் இல்லத்துள்ளே
இருத்துவான் எண்ணி நாமிருக்க
இவளும்ஒன் றெண்ணுகின்றாள்."
---பெரியாழ்வார் திருமொழி : 3: 7:10

பெரியாழ்வார் ஆண்டாளை நோக்கி, 'தாயன்பு முதலிய ஆறு குணங்களும் முற்றும் விளங்க அர்ச்சாவதார மூர்த்தியாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/46&oldid=957619" இருந்து மீள்விக்கப்பட்டது