பக்கம்:ஆண்டாள்.pdf/48

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
46
ஆண்டாள்
 

தமிழ்நாட்டிற் பிறந்து வளர்ந்து வண்டு தமிழ்ப்பாட்டிசைக்கும் மலர்களையே சூடி, தமிழ்ப் பாக்களினாலேயே இறைவனை வழுத்தி, தமிழ்நாட்டு எம்பெருமானையே சேரக் கருதிய கோதையாரின் மணம், தமிழ் வாழ்க்கையையே முற்றும் பொருந்திய காதல் மணத்தைச் சார்ந்தது எனக் கூறுதல் பொருந்தும்.

திருமொழியில் காணுமாறு இறைவனை அடைதற்குப் பற்பலவாறு முயன்று கொண்டிருந்த ஆண்டாளை அரங்கநாதன் ஏற்றுக்கொள்ளத் திருவுள்ளம் கொண்டான், பெரியாழ்வாருக்கும், கோயில் அர்ச்சருக்கும் கோதையாரைத் திருவரங்கத்துக்குக் கொண்டுவந்தால் தான் ஏற்றுக்கொள்வதாகப் பணித்தார் பணிவதே கடனாகக்கொண்ட ஆழ்வார் அவ்வாறே அழைத்துச் சென்றார். ஆண்டாள் அரங்கன் வீற்றிருக்கும் மூலத்தானத்திற்குக் சென்றார் எம்பெருமானோடு கலந்து மறைந்தார் என்பர்.

குருபரம்பரைப் பிரபாவம் என்னும் நூலில் சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாம் ஆண்டாளின் வரலாறு சுவை படச் சொல்லப்பட்டுள்ளதனை ஈண்டு அவ்வாறே காணுதல் பொருத்தமாகும்.

ஆழ்வாரும் திருமகளாரும் அதிப்ரீதியுடன் அங்கிருந்தும் புறப்பட்டு. திருவரங்கன் திருப்பதியுள் எழுந்தருளினவாறே, 'சூடிக்கொடுத்தாள் வந்தாள்! சுரும்பார் குழற்கோதை வந்தாள்! ஆண்டாள் வந்தாள்! ஆழ்வார் திருமகளார் வந்தார்! திருப்பாவை பாடியசெல்வி வந்தாள்! தென்னரங்கம் தொழுந்தேவி வந்தாள்!' என்று பல சின்னங்கள் பரிமாற எழுந்தருள்வித்துக் கொண்டு, அழகிய மணவாளன் திருமண்டபத்துள் சென்று நின்று திருப்பல்லக்கின் பட்டுத் திரையை வாங்க, அப்போதே நாச்சியார் அகிலம் காணும்படி, உதறி உடுத்த பட்டுச் சேலையும் பருத்த செங்கழுநீர் மாலையும் திருநுதல் கஸ்துரி நாமமும் கயல்போல் மிளிர்ந்து காதளவோடிய கடைக்கண் விழியும் ப்ரகாசிக்க, 'சிலம்பார்ப்ப,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/48&oldid=958449" இருந்து மீள்விக்கப்பட்டது