பக்கம்:ஆண்டாள்.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


முன்னுரை

தமிழ்நாட்டின் பழம்பெருஞ் சமயங்கள் சைவமும் வைணவமும் ஆகும். முகத்திரண்டு கண்ணே போல் தமிழர் பண்பாட்டின் தனிப்பெரும் தத்துவுக் கோட்பாடுகளாய் இவ்விரு சமயங்களும் தமிழகத்தே புகழ்பூத்து நீன்று நிலவிவருகின்றன. சைவர்களுக்குக் கோயில் என்றால் அது சிதம்ப்ரத்தையே குறிக்கும்; வைணவர்களுக்கு இது திருவரங்கத்தைழே குறிக்கும். சைவரும் வைன்வரும் பெருங்கோயில் என்று சிதம்பரத்தின்னயும் திருவரங்கத்தினையும் முறையே குறிப்பர். தொன்ம்ையும் பெருமையும் மிக்க இவ்வித திலங்களும் இன்றளவும் சிறப்புக் குன்றாமல் இலங்கி வருவது தமிழர் எண்ணி மகிழத்தக்கவொன்றாகும்.

தம் வாழ்க்கையில் நில்லாத செல்வத்தை நிலைக்கச் செய்து, நீங்காத கைப்புரட்சியை நிரம்பச் செய்து; கல்லாத இனத்தையெல்லாம் கற்கச் செய்து; காணாத பெருங் கழகம் ஆளுந்து வைத்து, இல்லாத புலவர்களை இருப்போர் ஆக்கி, இன்ையாத தமிழ்ப் புகழை ஈட்டிக்கொண்டு, வெல்லாத செயலில்லை என்று போற்ற விளங்கிய வள்ளல் அண்ணாமலை அரசர் புகழ் நின்று நிலவுகின்றது.

தொடக்க நாட்களில் தமிழ்ப் பேராசிரியர்களாகப் பணியாற்றிய பெரும்க்களில் ஒருவராகிய சொல்லின் செல்வ்ர் பேராசிரியர் டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை அவர்கள் தம் அருமை அன்னையார் சொருணாம்பாள் நினைவாக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிறுவிய அறக் கட்டளையின் சார்பில் "மானிடவர்க்கென்று பேச்சுப் படில் வாழகில்லேன்" என்று எண்ணிய எண்ணத் தினைத் திண்ணிய நெஞ்சமுடன் எடுத்துரைத்துத் திருவரங்கத்து எம்பெருமானுக்கே மணவாட்டியாய் நினைந்து அதில் வெற்றியும் பெற்ற சூடிக்கொடுத்த சுட்ர்க்கொடியாகவும் திருப்பாவை பாடியருளிய பாவையாகவும், கோதில் தமிழுரைத்த கோதையாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/5&oldid=565260" இருந்து மீள்விக்கப்பட்டது