பக்கம்:ஆண்டாள்.pdf/53

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். சி. பா.

51


என்று கருத்துடையவர் இராஜாஜி அவர்கள்.

இவ்விருவரும் பாடிய பாடல்களில் சிலவிடங்கள் சொற்றொடரால், கருத்தால் ஒன்றுபோல இருப்பது உண்மை.

மற்றொருவற் கென்னைப் பேசவொட்டேன்
மாலிருஞ்சோலை யெம்மாற் கல்லால்

(பெரியாழ்வார் திருமொழி 3:4:5:23. என்பர் பெரியாழ்வார்75

மானிடவர்க் கென்று பேச்சுப்படில்
வாழகில்லேன் கண்டாய் மன்மதனே

( நாச்சியார் திருமொழி 1:5:84)

என்பர் ஆண்டாள்.76 இவ்வாறு இன்னும் ஒன்றிரண்டு கூற்றுகள் ஒத்து வருகின்றன (பெரியாழ்வார் திருமொழி 3:46 3; நாச்சியார் திருமொழி 11:4; 3 4 .

இவற்றைக் கொண்டு ஒரு கருத்தினை நிலை நிறுத்துதற்கில்லை. காரணம் என்னவெனில் பெரு மனங்கள் உலக சிந்தனையிலும், இறை நினைப்பிலும் ஒன்றுபோல நினைக்கும் வாய்ப்பு பெற்றவை. ‘Great minds think alike' என்றபடி இதைக் கொள்ளலாம்.

இன்னும், தூய நெறிநின்ற பெரியாழ்வார் வளர்த்தெடுத்த பெண்கொடி என்பது பலவிடங்களில் பரக்கக் காணப்படுகின்றன. 'தீயின்றி புகையில்லை' யெனவே வளர்த்தெடுத்த மாண்பினாலேயே 'விட்டுசித்தன் உடைய கோதை' என்னும் பொருளில் 'விட்டு சித்தன் தன் கோதை' எனத் தொகையாகக் குறிக்கப்படுகின்றது. மேலும் ஆண்டாள் பெரியாழ்வாரைக் குறிக்குமிடத்தெல்லாம் படர்க்கையிலேயே வைத்துப் பேசுவதை நோக்கலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/53&oldid=958946" இருந்து மீள்விக்கப்பட்டது