பக்கம்:ஆண்டாள்.pdf/56

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

ஆண்டாள்


காட்டுகின்றது. மணிமேகலையில் நெடியோன் கதை விரிக்கப்படுகின்றது.

6. ஆழ்வாழ்கள் காலத்தில் வைணவ சமயம் உரம் பெற்ற நிலை சுட்டப்படுகின்றது. வைணவ சமயத்திற்கு ஆழ்வார்கள் அளித்த புத்துணர்ச்சி, மறுமலர்ச்சி, சமயப் பரப்பல் ஆகியவை பேசப்படுகின்றன.

7. ஐவகை ஞானம் - திருப்பாவையில் கூறப்படுவதைச் சுருக்க அறிமுகமாக எடுத்துரைக்கப்படுகின்றது.

8. அர்ச்சை நிலையின் சிறப்பு - அதுவே ஆண்டாளின் வாழ்வுக்கு வளம் சேர்த்தது.

9. ஆண்டாள் வில்லிபுத்துார் விளக்கு - அணிவிளக்கு - சுற்றும் எரியும் விளக்கு - பெரியாழ்வாரின் குலவிளக்கு - குத்துவிளக்கு - இறுதியில் குன்றின்மேலிட்ட விளக்காக விளங்கியமை. வேயர் பயந்த விளக்காகிய ஆண்டாள், ஆயர் குலத்தில் தோன்றிய கண்ணனாகிய அணிவிளக்கின் வனப்பு வீரம், உயர்வு முதலியவற்றால் ஈர்க்கப்பட்டு அவனை அணுகி அணுகி இறுதியில் அன்னவனோடு கலந்தமை.

10. கோதை தமிழ் - கோது.இல் தமிழ் - இன்தமிழ் வண்தமிழ். பிற ஆழ்வார்களை விஞ்சும் தமிழ். இவருடைய காதல் பள்ளமடையாகும்.

11. ஆண்டாள் பெரியாழ்வாரின் படைப்புப் பாத்திர மல்ல; பெரியாழ்வாரே ஆண்டாள் பாசுரங்களைப் பாடியவர் அல்லர் - சான்றுகள் கொண்டு காணின் இருவரும் அவரவர் நிலையில் தனித்தனி நின்று சிறப்புறுதலைக் காணலாம்.

திருவடிப் பூரத்தில் செகத்துதித்தகள் வாழியே!
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வழியே!
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே
பெரும்தூபூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே!
ஒருநூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே!
உயரரங்கர்க் கேகண்ணி உகந்தளித்தாள் வாழியே
மருவாருங் திருமல்லி வளநாடி வாழியே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/56&oldid=958871" இருந்து மீள்விக்கப்பட்டது