பக்கம்:ஆண்டாள்.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

வும்: திருவில்லிபுத்துார்கோன் என்றும், பட்டர்பிரான் என்றும் பெரியாழ்வார் என்றும் போற்றப்பெற்ற ஆழ்வார்தம் அன்புமகளாகவும் விளங்கித் திகழ்ந்த 'ஆண்டாள்' என்னும் தலைப்பில் இரண்டு நாட்கன் மூன்று சொற்பொழிவுகளை முறையே நிகழ்த்திறேன்.

சொல்லின் செல்வர் பேராசியர் டாக்டர் ரா.பி சேதுப்பிள்ளை அவர்கள், உலகப் புகழ்பெற்ற சென்னைப் பல்கலைக் கழகத்தில் இருபத்தைந்து ஆண்டுகள் பாங்குறப் பணியாற்றிய நல்லார் ஆவர். தாம் இருபத்தைந்து ஆண்டுகள் தமிழ்த் தொண்டாற்றியதனைக் கொண்டாடும் பொருட்டுத் தாம் தொடக்கத்தில் பணியாற்றிய - அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்கு இருபத்தையாயிரம் ரூபாயும், அதனைத் தொடர்ந்து பணியாற்றிய, சென்னைப் பல்கலைக் கழகத்திற்கு இருபத்தையாயிரம் ரூபாயும் வழங்கினார்கள்.

பேராசிரியர் சேதுப்பிள்ளை அவர்கள் தம்முடம்பிற்குக் காரணமாய் அமைந்து பின்னர்ப் புகழுடம்பு பெற்றுவிட்ட தம் அன்னையாரை நினைவுகூர்ந்து அறக்கட்டளை நிறுவினார்கள்.

சொருணாம்பாள் அறக்கட்டளையினை நிறுவிய சேதுப்பிள்ளை அவர்கள் அவ் அறக்கட்டளையின் சார்பாக ஆண்டுதோறும் புலவர் திருநாள் கொண்டாடப்பெற வேண்டும் என்று கருதினார்கள். அவர்கள் கொண்ட கருத்திற்கியைய முதன்முதலாகப் புலவர் திருநாள் 1959 ஆம் ஆண்டிற் கொண்டாடப் பெற்றது. என்னைப் பயன்படுத்தி வழிகாட்டி ஆளாக்கிய என் அருமைப் பேராசிரியப் பெருந்தகை டாக்டர் மு. வரதராசனார், அவர்கள் அத்திருநாளிற் கலந்து கொண்டு "இளங்கோ வடிகள்' என்னும் பொருள்பற்றிச் சீரியதோர் சொற்பெருக்காற்றினார்கள்.

என் ஆசிரியப் பிரான் முதலாண்டிற் பேசவும் இருபதாம் ஆண்டில் யான் பேசும் வாய்ப்புக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/6&oldid=723335" இருந்து மீள்விக்கப்பட்டது