பக்கம்:ஆண்டாள்.pdf/66

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64.

ஆண்டாள்

தோய்வதன்று என்றும் பகவத் ஸ்ம்ச்லேஷத்தையும், பகவத் ஸ்ம்ச்லேஷத்தையும், ஆசார்ய குல அவகாஹனத்னதயுமே நீராட்டமாகச் சொல்லிற் றென்னும் நிஷ்கர்ஷிக்கப் போதுமான ஒளசித்யமுள்ளது.

இதை மூவாயிரப்படியில் பெரியவாச்சான்பிள்ளையும், ஆறாயிரப் படியில் அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரும் ஸ்பஷ்டமாக விளக்கியேயுள்ளார்கள். "நீராடப் போதுவீர் என்றவிடத்துப் பெரியவாச்சான் பிள்ளை ஶீ ஸீக்தி வருமாறு-(நீராட) இத்தால் இவர்கள் நினைக்கிறது க்ருஷ்ண ஸ்ம்ச்லேஷம். தமிழரும் கலவியைச் சுனையாட லென்றார்கள். "ஏஷ ப்ரஹ்ம ப்ரஹ்விஷ்டோஸ்மி க்ரீஷ்மே சீதமிவஹ்ரதம்" என்று பகவத்ஸ்ம்ச்லேஷத்துக்கு க்ரீஷ்மகாலத்தில் குளிர்ந்த மடுவில் படிவதை த்ருஷ்டாந்தமாகச் சொல்லிற்றிறே" என்று.

ஆறாயிரப்படி ஶீ ஸீக்தி வருமாறு-"(நீராட) இவர்கள் தங்களுக்கு நீராடவென்று நோயாசையிறே. யமுநாஜலம் ஒருத்தியுடைய விரஹாக்நியாலே சுவறுமே, தமிழர் கலவியைச் சுனையாடலென்றாய்த்துச் சொல்லுவது. க்ருஷ்ணஸ்ம்ச்லேஷத்தை யாய்த்து இவர்கள் நீராட வென்கிறது. "ஏஷ ப்ரஹ்ம் ப்ரவிஷ்டோஸ்மி க்ரீஷ்மே சீதமிவ ஹ்ாதம்" என்னுமா போலே" என்று. ஆகவிவற்றால், உள்ளே .கொண்ட பொருள் வேறொன்றும், வெளியே யிடுஞ்சொல் வேறொன்றும் நிர்ணயிக்கப்படுகிறது.

நீராட என்கிற ஒரு சொல் விஷயத்தில் மாத்திரமன்று இது. இது, பெரும்பாலும் எல்லாச் சொற்களும் அந்தரங்கமான வேறொரு பொருளைக் கொண்டே பிரயோகிக்கப் பட்டனவென்று தேறலாம். அலங்கார சாஸ்திரத்தில், ருபகாதிசயேரக்தியென்று ஒரலங்கார

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/66&oldid=959389" இருந்து மீள்விக்கப்பட்டது