பக்கம்:ஆண்டாள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

ஆண்டாள்


அவன் ஆயிரம் ஆண்டுகள் செய்த பூசையின் பயனை இந்தத் தனுர்மாத ஒரு நாள் பூசையிலேயே அடைகிறான்."

"எல்லா வகையான யாகங்களைச் செய்வதிலும், எல்லா வகையான தீர்த்தங்களில் நீராடுவதிலும் உண்டாகும் புண்ணியம் இந்த மார்கழி மாதத்தில் ஒரு நாள் பூசையினால் பெறலாம். எட்டு மாதங்களில் செய்த பூசைகளைக் காட்டிலும் இந்த ஒரு மாத பூசையினால் அதிகமான பலத்தை அடையலாம்"

"இந்த மாதத்தில் (மார்கழியில்) விடியற்காலையில் எழுந்து எவனொருவன் நீராடி முறைப்படித் தன் கடமைகளைச் செய்கிறானோ அவனுக்கு என்னையே அர்ப் பணிப்பேன்;"

"பூலோகத்தில் நந்தகோபன் என்பவன் ஒருவன். அவனுடைய கோகுலத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் என்னிடம் அன்பு கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு *மார்கழி மாதத்தில் காலை வேளையில் நீராடுங்கள் என்று உபதேசித்தேன். அவர்களும் அதேபோலச் செய்தார்கள்."

பாகவதத்தில் பத்தாவது ஸ்கந்தத்தில் 22ஆவது அத்தியாயத்தில் பின்வரும் செய்திகள் கூறப்படுகின்றன;

"ஹேமந்த ருது (மார்கழி-தை) வின் முதல் மாதமான மார்கழியில் காலையில் எழுந்து யமுனை நதியை அடைந்து, அதன் தண்ணிரில் நன்கு மூழ்கிக் குளித்தெழுந்து கரைக்கு வந்து அங்குள்ள மணலைக் கொண்டு அலங்கரித்து, தூப தீபங்கள் காட்டி ஹவிஸ்ஸை (அரிசியையும் பச்சைப்பருப்பையும் கலந்து கஞ்சியை வடிக்காமல் ஆக்கப்பெற்ற பொங்கல்) நிவேதனம் செய்து உண்பார்கள்."

'ஏ! காத்தியகயினி! மகா மாயையே! எவ்வுலகிற்கும் ஆதாரமானவவே! தேவி பராசக்தியே! எங்களுக்கு நந்த கோபனுடைய மகனான கிருஷ்ணபிரானைக் கணவனாக அருள்வாயாக."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/68&oldid=959391" இலிருந்து மீள்விக்கப்பட்டது