பக்கம்:ஆண்டாள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

ஆண்டாள்


தியானித்துக் கொண்டு ஒரு மாச காலம் பூஜை செய்து விரதத்தை விடாமல் நடத்தி வந்தனர். அக் கோபி கன்னியர் ஒருநாள், யமுனா நதியில் ஸ்நானஞ் செய்தற்காக அருணோதயத்தில் எழுந்திருந்த அவரவருடைய தோழிமார்களின் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டு ஒருவர்க்கொருவர் கையைக் கோத்துக் கொண்டும் கிருஷ்ணசரிதங்களைப் பாடிக்கொண்டும் நடந்து சென்றனர். அப்பெண்கள் யமுனாநதியின் ஒரு பக்கஞ் சேர்ந்து, அவ்விடத்தே, வழக்கப்படி தங்கள் ஆடைகளை அவிழ்த்து வைத்துவிட்டுக் கண்ணன் சரித்திரங்களைக் கானஞ் செய்து கொண்டு நீரில் விளையாடுவாராயினர். பரமயோகிகளுக்கும் யோகியும் ஸர்வஜனுமாகிய கண்ணபிரான் கோபிகன்னியர் அங்ஙனம் நீர் விளையாட்டு நிகழ்த்துவதறிந்து அப்பெண்களின் விரதபலத்தை ஆளிப்பதற்காகத் தம் நண்பர்கள் சூழல் அவ்விடஞ்சென்றார்."

-ஆராய்ச்சித் தொருதி, ப. 187, 188

கண்ணன் கோபியர் துகில்களைக் கவர்ந்த செய்தி அகநானூற்றிலுங் கூறப்பெறும்.

வண்புனல் தொழுநை வார்மணல் அகன்றுறை
அண்டர் மகளிர் தண்டழை உடீஇயர்
மரஞ்செல மிதித்த மாஅல் போல
-அகநானூறு, 59; 4-6

கோபியர் கண்ணனிடம் தங்கள் துகில்களைத் தருவான் வேண்ட அவன் கோபியர்தம் அன்பைப் பல்லாற்றானும் சோதித்து முடிவில் அவரவர்தம் ஆடைகனை அளித்துச் "சதிகளாகிய நீங்கள் எந்த நோக்கத்தைக் கொண்டு காத்யாயனி விரதத்தை நடத்தினர்களோ அந்த எண்ணம் இன்றிரவில் என்னோடு கூடி விளையாடுவதால் நிறைவேறும்; எல்லோரும் கோகுலம் செல்லுங்கள்" என்று கட்டளையிட்டருளியதாகப் பழைய நூற்களிற் கூறப் பெறுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/70&oldid=983844" இலிருந்து மீள்விக்கப்பட்டது