பக்கம்:ஆண்டாள்.pdf/72

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

ஆண்டாள்

என்ற பொருளைச் சுட்டுவதில்லை. எனவே 'நோன்பு' என்ற பொருளைச் சுட்டும் 'பாவை' என்ற சொல், வணங்கப் பெற்ற பிரதிமையடியாக வந்ததென்றே கொள்ளக் கிடக்கின்றது. ஆயினும் ஈண்டு ஓர் ஐயந்தோன்றும். திருமால் ஒருவரையே பத்தித் திறத்துடன் பற்றி நின்ற ஆண்டாள் தேவி விரதம் கூறும் ஒரு பிரபந்தத்தை - திருப்பாவையைப் பாடியிருப்பாரா என்பதே ஆகும் அது. கண்ணனை அடைதற்குக் கோபியர்கள் காத்தியாயனீ தேவியைத் தொழுது நின்ற தகவு பாகவதத்தால் வெளிப்பட்டிருக்கும்போது, அக்கோபியரையே கண்ணனை அடையப் பின்பற்றிய ஆண்டாளும் அவர்கள் மேற்கொண்ட விரகினையே கையாண்டார் எனக் கொள்வதனால் வரும் இழுக்கொன்றுமில்லை, மேலும், திருமாலைத் தன் நாயகப்பிரானாக அடைய வேண்டி ஆண்டாள் நாச்சியார் திருமொழியில் காமனையும் அவன் தம்பி சாமனையும் வேண்டி நிற்கும் நிலையினைப் பின்வரும் பாடலிற் காணலாம்.


தையொரு திங்களும் தரைவிளக்கித்
தண்மண் டலமிட்டு மாசி முன்னாள்
ஐயநுண் மணற்கொண்டு தெருவணிந்து
அழகினுக் கலங்கரித் தனங்கதேவா
உய்யவு மாங்கொலோன்று சொல்லி
உன்னையு மும்பியையும் தொழுதேன்
வெய்யதோர் தழலுமிழ் சக்கரக்கை
வேங்கட வற்கென்னை விதிக் கிற்றியே

- நாச்சியார் திருமொழி 1:1

'சத்தியை வியந்தது' என்ற திருவெம்பாவைத் தலக் குறிப்பு, காத்தியாயனீ அல்லது சத்தியின் விரதத்தையே புலப்படுத்தக் கூடியதென்ற என் கொள்கையை மழை வேண்டிக்கூறிய 'முன்னிக்கடல்' என்ற திருவெம்பாவைப் பாட்டிற் பராசத்தியே உவமை கூறப்பட்டிருத்தலும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/72&oldid=991806" இருந்து மீள்விக்கப்பட்டது