பக்கம்:ஆண்டாள்.pdf/73

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். சி. பா.

71பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி யாடேலோ ரெம்பாவாய்

- திருவெம்பாவை : 14

என அந்தச் சத்தியே சிறப்பாக வணங்கப்பட்டிருத்தலும் நன்கு வலியுறுத்தலுங் காண்க" எனப் பேராசிரியர் மு. இராகவையங்கார் கூறியுள்ள கருத்தும் ஈண்டு மனங் கொளத்தக்கது.

மேலும் திருப்பாவை, திருவெம்பாவை போலவே முற்காலத்தே சில நூற்கள் வழக்காற்றிலிருந்து மறைந்து போயிருக்க வேண்டும் என்பது தெரிய வருகிறது.

கோழியுங் கூவின குக்கி லழைத்தன
தாழி யுணீலத் தடங்கணீர் போதுமினோ
ஆழிசூழ் வையத் தறிவ னடியேத்திக்
கூழை நனையக் குடைந்து குளிர்புனல்
ஊழியுண் மன்னுவோ மென்றேலோ ரெம்பாவாய்.

யாப்பருங்கல விருத்தி இறுதி நூற்பாவுரையுள் மேற் கண்ட பாட்டொன்று 'திருப்பாவை' போன்ற பிரபந்தங்கள் 'பாவைப் பாட்டு' என முன்னோரால் வழங்கப்பட்டன (தொல்காப்பியம்: பொருளதிகாரம்:461; உரை யாப்பருங்கல விருத்தி-பக். 394) என்ற குறிப்பின் கீழ்க் காணப்படுகின்றது. 'அறிவனடியேத்தி' என்ற தொடரால் இப்பாட்டு அருகக் கடவுளையோ, புத்தபகவானையோ பற்றியதாதல் வேண்டும். மார்கழி நோன்பைக் கொண்டாடுவதற்குச் சமணர் பாராயணம் செய்யும் 'திருவெம்பாவை' எனப்பழைய பிரபந்தம் ஒன்று வழக்கில் இருந்ததாகவும், அஃது அச்சிடப் பட்டுள்ளது என்றும் அறிஞர் அறைகுவர்.

தங்கத் தமிழ் இலக்கியங்களில் தொன்மைத் தமிழ் இலக்கியங்களாய்த் தோன்றும் சங்க இலக்கியங்களில் 'மார்கழி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/73&oldid=991807" இருந்து மீள்விக்கப்பட்டது