பக்கம்:ஆண்டாள்.pdf/74

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

ஆண்டாள்

நீராட்டம்' பற்றிய குறிப்பு இல்லையெனினும் 'தைந்நீராடல்' பற்றிய குறிப்புகள் இலங்கக் காணலாம்.

எட்டுத்தொகை நூற்களுள் முதலாவதாக அமைந்திருக்கும் நற்றிணை நானூறில் இடம் பெற்றுள்ள பாடல் ஒன்று வருமாறு:

"கொடிசசி காக்கும் அடுக்கற் பைந்தினை முந்திவிளை பெருங்குரல் கொண்ட மந்தி கல்லாக் கடுவனொடு நல்வரை யேறி அங்கை நிறைய ஞெமிடிக் கொண்டுதன் திரையணற் சொடுங்கவுள் நிறைய முக்கி வான்பெயல் நனைந்த புறத்த நோன்பியர் தையூ னிருக்கையில் தோன்று நாடன் வந்னேன் வாழி தோழி யுலகரு கயங்கண் அற்ற பைதறு காலைப் பீளோடு திரங்துய நெல்லிற்கு நள்ளென் யாமத்து மழை பொழிந் தாங்கே;

- நற்றிணை : 22

இப்பாட்டிற்கு நற்றிணை பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் வரைந்த உரையின் ஒரு பகுதி வருமாறு:

""நோன்புடையார் தைத் திங்கட் பிறப்பில்
நீராடி நோன்பு முற்றியிருந்து உண்ணுதல்போல்"

மேலும் அவர் தையூணிருக்கை--- தைத்திங்கட் பிறப்பில் நீராடி அன்று ஆக்கப்படுமாட்சிமைப்பட்ட உணவுண்ண விடுத்தல். நோன்பியர்---ஆடி முதலாக மார்கழியீறாகக் கிடந்த ஆறு திங்களும் தேவர்க்கு இராப் பொழுதெனப் புராணங் கூறுதலுண்மையின், இரவு பிற்றையாமங் கொண்ட சில பொழுதுண்ணா திருக்கு நோன்பியர்" என்று விளக்கவுரை யும் பகர்ந்துள்ளார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/74&oldid=991808" இருந்து மீள்விக்கப்பட்டது