பக்கம்:ஆண்டாள்.pdf/76

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

ஆண்டாள்

'ஒன்றொழி பொதுச் சொல்

(நன்னூல்.269)

"இருதிணை யான்பெணு ளொன்றனை யொழிக்கும்
பெயரும் வினையுங் குறிப்பி னானே' (நன்னூல் 352)

என்னும் நன்னூல் நூற்பாக்களின் உரையில், மயிலைநாதர், உயர்திணை வினைச்சொல் ஆணொழித்து நின்றமைக்கு----மருவூரார் தைந்நீராடினார்', 'இன்று இவ்வூராரெல்லாந் தைந் நீராடுப' என்ற தொடர்களை உதாரணம் காட்டலால் , தைந் நீராடல் மகளிர்க்கு உரியதேயன்றி ஆண்பாலார்க்குரிய தன்றென்பது பெற்றாம்.


பரிபாடலில் வையையாற்றின் வனப்பினை வகையுறப் புனைந்து காட்டா நிற்கும் ஆசிரியர் நல்லந்துவனார் இத்தைந் நீராடல் பற்றிய குறிப்பை வழங்கும் அவர் பாடியுள்ள பரிபாடலின் ஒரு பகுதி மட்டும் கீழே காட்டப்படுகின்றது.


"கனைக்கு மதிர்குரல் கார்வான நீங்கப்
பனிப்படு பைதல் விதலைப் பருவத்து
ஞாயிறு காயா நளிமாரிப் பிற்குளத்து
மாயிருந் திங்கண் மறுநிறை யாதிரை
விரிநூ லந்தணர் விழவு தொடங்கப்
புரிநூ லந்தணர் பொலங்கல மேற்ப
வெம்பா தாக வியனில் வரைப்பென
அம்பா வாடலி னாய்தொடிக் கன்னியர்
முனித்துறை முதல்வியர் முறைமை காட்டப்
பனிப்பலர் பாடிப் பருமண லருவியின்
ஊதை யூர்தர வுறைசிறை வேதியர்
நெறிநிமிர் நுடங்கழல் பேணிய சிறப்பிற்
றையன் மகளிர் றீரணி புலர்த்தர
வையை நினக்கு மடைவாய்த் தன்று
மையாட லாடன் மழபுலவர் மாறெழுத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/76&oldid=991814" இருந்து மீள்விக்கப்பட்டது