பக்கம்:ஆண்டாள்.pdf/77

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
டாக்டர். சி. பா.
75
 பொய்யாட லாடும் புணர்ப்பி னவரவர்
தீயெரிப் பாலுஞ் செறிதவமுன் பற்றியோ
தாயருகா நின்று தவத்தைந்நீ ராடுதல் நோக்கினாள்."

-பரிபாடல்; 11 : 74-92

தமிழ்த் தாத்தா டாக்டர் உ.வே. சாமிநாதையர் அவர்கள் இப்பகுதிக்குத் தரும் எளிய விளக்கம் வருமாறு:

"கார் வானம் அதிர்குரல் நீங்கப் பனி மிகுதலாற் குளிரால் நடுங்குதலையுடைய முன்பனிப் பருவத்தில் மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தில் ஆகமங்களை யுணர்ந்த பூசகர் அத்திருவாதிரைக்குத் தெய்வமாகிய சிவபெருமானுக்குரிய விழாவைச் செய்யத் தொடங்கினர்; அந்தணர் பொற்கலத்தை யேந்தினர்; உலகம் மழையாற் குளிர்வதாக வென்று அம்பா வாடலைச் செய்யும் கன்னியர், முதிய அந்தண மகளிர் நோன்பு செய்யும் முறைமையைக் காட்டப் பனியையுடைய விடியற்காலத்தே நீராடினர்; அங்ஙனம் ஆடிய பின்னர், குளிர் வாடை வீசுவதால் அம்மகளிர் கரையில் அந்தணர் வேத மந்திரங்களால் வளர்த்த அக்கினியினருகில் சென்று தம் ஈர ஆடைகளை உலர்த்தினர். அவ்வந்தணர் அந்த அக்கினியினிடம் கொடுக்கும் அவியானது. வையையே நினக்கு வாய்த்ததாக இருந்தது.

மையோலை பிடித்த இளைய பிள்ளைகளின் விளையாட்டிற்கு மாறாக எழுந்து காமக் குறிப்பில்லாத விளையாட்டைச் செய்கின்ற ஆயத்தினையுடைய அக்கன்னி மகளிர் தம் புலன்கனையடக்கித் தவத்தைப் புலகாற் செய்தோ, தம் தாய்மார்க்கருகில் நின்று தைந்நீராடலாகிய தவத்தை நின்பாற் செய்யப் பெற்றனர்? சொல்வாயாக."

இப்பகுதிக்கு உரை வரைந்த பரிமேலழகர் "கார்வானம் அதிர்குரல் நீங்கப் பனிமிகுதலாற் குளிரால் நடுங்குதலை யுடைய முன்பனிப் பருவத்து ஞாயிறு தெறாத கடை மாரியையுடைய மார்கழி மாதத்துத் திங்கள் மறுவொடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/77&oldid=991816" இருந்து மீள்விக்கப்பட்டது