பக்கம்:ஆண்டாள்.pdf/80

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
78
ஆண்டாள்
 


இப்பதினோராவது பரிபாடலின் அடியிற் கண்டுள்ள கொளுவருமாறு :

வரைவுமலிந்த தோழி கன்னிப் பருவத்துத் தைந்நீராடத் தவம் தலைப்பட்டேமென வையையை நோக்கித் தலைவன் கேட்பச் சொல்லியது' என்பதாகும்.

தலைமகள் கன்னிப்பருவத்தில் தைந்நீராடி நோற்ற சிறப்பாலேயே தன் நெஞ்சுகக்கும் உத்தமத் தலைமகனைப் பெற்று இன்புற்றாள் என்பது பெறப்படுகின்றது. திருவெம் பாவை நல்ல சிவனடியாரை விரும்பி வேண்டும் கன்னி மகளிரைக் குறிப்பிடத் தி ரு ப் ப m ைவ கண்ணனையே கணவனாக வேண்டி நையும் ஆயர் மகளிர் திறம் கூறுகின்றது.

பிங்கலந்தை நிகண்டும் பெண்பாற் பிள்ளைப்பாட்டின் திறம் கூறும் பொழுது பின்வருமாறு குறிப்பிடுகின்றது.

பேணுஞ் சிறப்பிற்பெண்மக வாயின் மூன்றா மாண்டிற் குழமன மொழிதலும் ஐந்தின் முதலா வொன்பதின் காறும் ஐங்கனைக் கிழவனை யார்வமொடு நோற்றலும் பனிநீர் தோய்தலும் பாவை யாடலும்'

- -பிங்கலந்தை: 1869

தமிழ்நாட்டின் பழைய பழக்கங்கள் பலவும் இன்றும் வழக்கிற் கொண்டுள்ள இன்றைய மலையாள நாட்டில், இம்மார்கழி நோன்பு சிற்சில மாறுதல்கள் நேர்ந்து பின் வருமாறு கொண்டாடப்படுவதாகத் திரு. கோபால பணிக்கர் "மலையாளமும் அதில் வாழும் மக்களும்’ (Malabar and its folk) என்னும் தம் ஆங்கில நூலிற் குறிப்பிட்டுள்ளார்.

"மலையாளத்தில் நடைபெறும் மூன்று முக்கிய உற்சவங் களிலே திருவாதிரை என்பதொன்றாம். அஃது அங்கே தனுர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/80&oldid=524671" இருந்து மீள்விக்கப்பட்டது