உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆண்டாள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

ஆண்டாள்


"மார்கழித் திருவாதிரையன்று "அக்காரடலை, நிவேதனம் செய்வதற்கு என்று:முதல் இராஜராஜ சோழன் கோயிற்கு நிலங்கள் விட்டுள்ள செய்தி சர்ஸனத்தால் அறியப் படுகின்றது Ep. Rep.68 of 1914) இதனால் அக்காரடலை (சர்க்கரைப் பொங்கல்) அவ்வுற்சவத்திற்கு முக்கியமான தென்பது உணரப்படும். வைஷ்ணவர்க்குள் அது சிறப்பாக இன்றும் வழங்கப்படுகின்றது திருவாதிரைக்களி எனச் சைவர்க்குள் வழங்குதலும் இத்தகைய தேயாம்' (பேராசிரியர் மு. இராகவையங்கார்; ஆராய்ச்சித் தொகுதி இரண்டாம் பதிப்பு, மார்ச்சு 1964, பக். 203.

தனியன்கள்

பராசர பட்டர் அருளிச் செய்தது

நீளாதுங்க ஸ்தனகிரிதடி ஸீப்த முத்போதிய கிருஷ்ணம்
பாரார்த்யம் ஸ்வம் ச்ருதிசதசிரஸ் ஸித்தமத்யா பயந்தி!
ஸர்வோச் சிஷ்டாயாம் ஸ்ரஜிகிகளிதம்
யாபலாத் கிருதிய புங்க்தே
கோதா தஸ்யை நம இதமிதம் பூய ஏவாஸ்து பூய.

இதன் பொழிப்புரை வருமாறு :

"நீளைப் பிராட்டியிற் அம்சமாள் நப்பிள்ளைப் பிராட்டியின் மார்பகத் தாழ்வரையிலே சுகநித்திரை செய்பவனும், தான் சூடிக் களைந்த மாலையால் கட்டப்பட்டுள்ளவனுமான பூரீ கிருஷ்ணனாகிற சிங்கத்தை எழுப்பிப் பல வேதங்களின் உண்மைகளையும் உணர்த்தி, தனது பாரதந்திரியத்தால் எந்த ஆண்டாள் அவளை வலிய அனுபவிக்கிறாளோ அந்த ஆண்டாளுக்கு என் வணக்கங்கள் காலமுள்ளளவும் இருக் கட்டும்." (சாண்டில்யன் விளக்கவுரை)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/84&oldid=1155996" இலிருந்து மீள்விக்கப்பட்டது