பக்கம்:ஆண்டாள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். சி. பா.

85


பல்லாண்டு பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டு
பல்கோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
செவ்வடி செவ்விதிருக் காப்பு

என்று பல்லாண்டு பாடும் ஆழ்வார்க்கு இவர் ஒரே மகளார் அல்லவா? மேலும் ஆழ்வார் குடி அனைத்திற்குமே இவள் ஒருத்தியே ஒரு தனிமகளாய்த் துலங்குகின்றார். அவ்வகையில் நோக்கும்போது ஆழ்வார் பதின்மர்க்கும் ஒரே மகளாராய்த் தோன்றிய இவருக்கும் ஆழ்வார் அனைவரின் ஞான பக்தி வைராக்கியங்கள் வந்து சேர்ந்ததோடு, அவர்கள் யக்தி வேறு. தாங்கள் வேறு என்று நின்றது போலல்லாமல், பக்தியையும் ஆண்டாளையும் பிரித்தற்கு இயலா நிலையில் பக்தி மயமாகவே நிலை நின்றவர் ஆண்டாள் எனில் அஃது உண்மையேயன்றோ!"

அஞ்சுகுடிக்கொரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தஞ்செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய்

என்று உபதேச ரத்தினமாலை (34) பகர்வது இக்கருத்திற்கு அரண் சேர்ப்பதாகும்.

ஆண்டாள் நாம் கண்ணாற் காணுகின்ற இயற்கைப் பொருள்கள் யாவற்றிலும் இறையைக் காண்கிறார். பார்க்குமிடமெல்லாம் பரம்பொருளாகவே இவர்க்குக் காட்சி வழங்குகின்றது.

வைணவப் பிரபந்தங்களில் மயர்வற மதிநலம் பெற்றிருந்த பண்டிதை எஸ். கிருஷ்ணவேணி அம்மையார் திருப்பாவை, "இந்நூல் அஞ்ஞானத்தில் ஆழ்ந்து கிடக்கும் ஆன்மாக்களுக்கு ஞானம் ஊட்டி இறையோடு கலந்து இன்பந் துய்க்கச் செய்தலை விளக்குகிறது எனக் கொள்க. அன்றியும் எங்ஙனம் ஓம் என்னும் பிரணவம், திருமந்திரம், துவயம், ச்ரமஸ்லோகம் ஆகிய முன்று மந்திரங்களின் பொருள்களை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/87&oldid=1462082" இலிருந்து மீள்விக்கப்பட்டது