பக்கம்:ஆண்டாள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். சி. பா.

91


"கொடுங்கோல் மன்னன் நாட்டில் பசுக்கள் பால் தாரா; வேதம் வல்ல அந்தணர்கள் வேத நூல்களைக் கற்றலையும் கற்றதுரைப்பதனையும் மறந்து விடுவர்; செங்கோல் வேந்தன் செம்மையான முறையில் ஆட்சி நடத்தவில்லை யென்றால்" என்பர் திருவள்ளுவர்.

"ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்"

-திருக்குறள்:560

இளங்கோவடிகளும் தம் காப்பியத்தில்,

“ஆகாத் தோம்பி ஆப்பயன் அளிக்கும்
கோவலர் வாழ்க்கை யோர்கொடும்பா டில்லை"

- சிலப்பதிகாரம்; அடைக்கலக்காதை: 120 - 121

எனக் கவுந்தியடிகள் கூற்றால் ஆயர் தம் வாழ்வைச் சிறப்பித்துச் சொல்லியுள்ளார். ஆண்டாளே,

குற்றம் ஒன்றில்லாத கோவலர்தம் பொற்கொடியே
நற்செல்வன் தங்காய்

-திருப்பாவை : 11

என்று குறிப்பிடக் காணலாம்.

ஆய மகளிர் குரவைக் கூத்தாடி,

மடந்தாழும் நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றத்
தொடர்ந்தா ரணமுழங்கப் பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே
நாராய ணாவென்னா நாவென்ன நாவே

- சிலப்பதிகாரம்; ஆய்ச்சியர் குரவை: படர்க்கைப் பரவல்: 3
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/93&oldid=1462089" இலிருந்து மீள்விக்கப்பட்டது