டாக்டர். சி. பா.
95
எனும் பகுதி காணப்படுகின்றது. எனவே போர்க்களத்தில் அஞ்சாது எதிர் வந்த பகைவர்களை அதிராது முடித்து வெற்றி வாகை சூடிய வீரர்களையே மறக்குலத்து மகளிர்ஆயர் குலத்து அணிநல்லார் - கணவனாக வரித்துக் கொள்ளுதல் வழக்கு.
ஈண்டு, ஆயர்குலப் பெண்கள் பாடிப் பரவி நிற்கும் கண்ணன். கூர்வேலினைக் கொண்டவனும், போர்க்களத்திலே சொடுந்தொழிலாம் கொன்று குவிப்பதிலே வல்லவனுமான நந்த கோபனுடைய குமாரனாவான்; அழகெல்லாம் ஒருசேரத் திரண்டு விளங்கும் அழகிய கண்களையுடைய யசோதைப் பிராட்டியின் இளஞ்சிங்கமாகத் திகழ்கிறான் கண்ணன்; கரிய உடம்பினையும், கமல மலர் போன்று சிவந்த கண்களையும், ஒளி வீச்சில் கதிரவனையும், குளிர்ப் பொழிவில் சந்திரனையும் ஒத்த திருமுக மண்டலத்தையுடையவனாகவும் விளங்கு கின்றான்; அவனே பகவானாகிய நாராயணனுமாவான்.
கண்ணன் கழலினை நண்ணும் மனமுடையீர்
எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே
-திருவாய்மொழி
என்ற நம்மாழ்வார் கருத்துப்படி, கண்ணன் கழலினை அடைய வேண்டும் என்று அவாவுறும் மனத்தவர் உறுதியாக நினைக்க வேண்டுவது நாராயணாவென்னும் நாமமாகும். இங்குக் கண்ணனைக் 'கதிர் மதியம் போல் முகத்தான்' என ஆண்டாள் கூறியிருக்கக் காரணம், உலக உயிர்களை உதய காலத்தில் உறக்கத்திலிருந்து எழுப்புவது சூரியனே யன்றோ! மேலும் 'கதிர் மதியம் போல் முகத்தான்' என்று அக்கண்ணன் கூறப்பட்டிருப்பதற்குக் காரணம் மக்கள் மனத்தில் ஒரு கிளர்ச்சியும், குளிர்ச்சியும், இதமும் தந்து அவர்களை மகிழ்ச்சியில் திளைக்கச் செய்பவன் சந்திரனேயாவன். சம்சார சாகரம் எனும் வாழ்க்கைப் பெருங்கடலில் மயங்கி ஆழ்த்து உறங்கிக் கிடக்கும் உலக உயிர்களைத் தட்டியெழுப்பி,