பக்கம்:ஆண் சிங்கம்.pdf/101

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஆண் சிங்கம்இருட்டுகிற வேளைக்கு வீடு திரும்பி, சாப்பிட்டு முடித் ததும், அலுத்துப்போய் தூங்கத்தான் முடிகிறது. படிக்க நேரம் இருப்பதில்லை. இதைவிட நகரத்தில் பள்ளிக்கூட ஹாஸ்டலிலேயே சேர்ந்து, அங்கேயே தங்கினால் நன்றாகப் படிக்க முடியும்.’

‘ இப்படிப் பிறவிப்பெருமாள் சொன்னான். அதன் உண்மையை அண்ணனும் உணர்ந்தான்.

‘கொஞ்சம் அதிகமான செலவு ஏற்படும். அதுவா பெரிசு? தம்பியின் வசதியும் வளர்ச்சியும்தான் முக்கியம் என்று பேசியது அவன் உள்ளம். இளையவனின் விருப்பம் உடனடியாக நிறைவேற்றப்பட்டது.

ராமலிங்கம் பெரியவர்களிடம் வாயடி அடித்து, அவர்கள் வாயடைத்துப் போகும்படி செய்தானே தவிர, ஓடும் காலத்தையும் ஒடுங்காத உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்த இயலவில்லை. அவன் கண்கள் பசும் வெளியில் மேயும் ஆடுகள்போல் திரிந்து கொண்டிருந் தன. அவன் உள்ளம் ஆசைக் கனவுகளை வளர்த்து வந்தது.

அவன் கண்கள் முக்கியமாக ஒரு நபரைக் காண் பதற்காக ஏங்கிப் புரளும். இனிய அந்த உருவத்தைக் காணும்போது, மகிழ்ச்சியால் மினுமினுக்கும்.

முதலில் அவன் அவளைப் பாவாடை தாவணிப் பருவத்துக் குமரியாகவே கண்டான். அவன் காலையில் கடைக்குச் செல்லும் போதெல்லாம் அந்தப் பெண்ணும் தென்படுவாள். வாய்க்காலில் தண்ணிர் எடுத்துச் செல்ல எதிரே வருவாள்; அல்லது, நிறை குடத்தோடு முன்னால் போவாள். எந்நிலையில் பார்த்தாலும் கண்ணுக்கு விருந்து அவள்.

தினசரி பார்க்கும் பழக்கம் என்கிற சாதாரண நிலை வளர்ந்து, ஒவ்வொரு நாளும் ஆவலோடு எதிர் பார்ப்பது என்றாகி, பரஸ்பரம் பார்வை பரிமாறிக் கொள்ளா விட்டால், பிரமாத நஷ்டம் ஏற்பட்டு விட்டது போல் மனம் வேதனைப்படும் அளவுக்கு அது முற்றியது. –

99