பக்கம்:ஆண் சிங்கம்.pdf/103

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளதுஆண் சிங்கம்

வளர்த்தாலும், சங்கோஜம் என்பது வலுப்பெற்று ஆட்சி நடத்தினால், –துணிச்சல் இன்மை என்பது உள்ளுறை பண்பாக அமைந்து உரம் பெற்றிருந்தால்–காலம் முன்னேறக் காண்பது அல்லாமல், வேறு எதில் முன்னேற்றம் காண முடியும்?

ராமலிங்கம் சங்கோஜ குணம் மிகுதியாகப் பெற் நிருந்தான், பத்மாவைக் காணும் போதெல்லாம் பார்ப்பதும் வெறும் புன்னகை பூப்பதுமாக – அதிலேயே திருப்தி கொள்பவனாக–இருந்தான். ‘பத்மா!’ என்று அன்பு குழைய அழைத்து, இன்சொல் கலந்து உரையாட அவனுக்கு ஆசை இல்லாமலா இருந்தது? அருகே நின்று அவள் உதிர்க்கும் கிண்கிணிச் சிரிப்பையும், தேன் மொழிகளையும் செவிமடுக்க வேண்டும் என்று அவன் மனம் விரும்பவில்லையா என்ன?

ஆலுைம், காலம் ஒடிக்கொண்டிருந்ததே தவிர, ‘பத்மா’ என்று ஒருதரம்கூட அவளை அழைத்து நிறுத்த அவன் துணிந்ததில்லை.

பத்மா பாவாடைப் பருவத்தை மீறி, வர்ண வர்ணச் சீலைகள் கட்டி உலவும் ஒவியமாக மாறினாள். அவள் நடையில் ஒர் அமைதி, அசைவுகளில் தனி எழில்; பார்வையில் பேசாத பேச்சின் பொருள்கள் எவ்வளவோ கூடின.

அவன் பார்த்து ரசித்துக்கொண்டுதான் இருந்தான். அவள் தன்னவளாக வேண்டும் என்று அவன் ஆசைப்பட்டான். எனினும், எல்லா ஆசைகளும், எல்லா ஏக்கங்களும் தனது மனக் குகையினுள்ளே மறைந்து கிடக்கும்படி கவனிப்பதிலேயே அவன் ஆர்வம் செலுத்தினான். அதற்கு அவனுடைய சங்கோசம்தான் முக்கிய காரணம். இருப்பினும், ‘தம்பியை முன்னுக்குக் கொண்டு வரவேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. பிறவி படித்து முடித்து ஓர் உத்தியோகம் தேடிக் கொள்ளட்டும். அதன் பிறகு நம்ம கலியாணத்தையும் அவன் கலியாணத்தையும் சேர்த்து நடத்தி விடலாம் என்று தனக்குத்தானே அவன் கூறிக் கொள்வான்,

101