பக்கம்:ஆண் சிங்கம்.pdf/107

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஆண் சிங்கம்

 எண்ணங்களை வெளியிடாததனாலே பல அரிய காரியங் கள் நிகழ முடியாமலே போகின்றன; சீரிய ஆசைகள் கர்ப்பத்திலேயே அழிந்து மடிகின்றன என்று அவன் உள்ளம் முனங்கியது. அவன் யாரையும் குறை கூறத் தயாராக இல்லை.

மேலும், பிறவிப்பெருமாள் யார்? அவனுடைய தம்பிதானே? அவனுக்கு எவ்விதமான குறையும் ஏற் படாமல் கவனிக்க வேண்டிய கடமை தனக்கு இருக்கிறதே...

ராமலிங்கம் அங்குமிங்கும் அலைந்து சில முக்கிய காரியங்களைக் கவனித்து முடித்தான். முதலாளி அவர்களின் அதிமுக்கியமான பிஸினஸ் ஒன்றைக் கவனித்து முடிப்பதற்காக அவர்கள் என்னைக் கொழும் புக்கு அனுப்புகிறார்கள். முதலாளியின் கொழும்புக் கடையை நிர்வகிக்க நம்பிக்கையான ஆள் தேவைப் படுவதால் என்னை அங்கேயே இருக்கும்படி வற்புறுத் துகிறார்கள். ஆகவே என்னை எதிர் பார்க்காமல் தம்பியின் கலியாணத்தை நடத்தவும். என் கலியாணச் செலவுக்கு உதவும் என்று நான் சேமித்த சிறு தொகையை தம்பிக்கு அளிக்கிறேன். பணம் இத்துடன் இருக்கிறது என்று சீட்டு எழுதிப் பெட்டியில் வைத்துவிட்டு, யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் அவன் வெளியேறினன்.

குடும்பம் என்கிற சிலுவையில் கட்டுண்டு, கடமை, பொறுப்பு ஆகிய ஆணிகளால் அறையப்பட்டு, வேதனையை மெளனமாகத் தாங்கிக் கொள்ளும் போதே, தலைமீது குவிகிற தரும சோதனை எனும் முள் கிரீடத்தையும் ஏற்று._பொறுமையோடு சகித்துக் கொள்ளும் திராணி பெற்றுள்ள எத்தனையோ சாதாரண மனிதர்களில் ஒருவன்தான் அந்தப் பெரியவன். - ~


*

106