பக்கம்:ஆண் சிங்கம்.pdf/109

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஆண் சிங்கம்

மொத்த உருவமும், நடையும், உடையும் பார்க்கும் தினுசும், மீசையின் முறுக்கும், அட்டகாசச் சிரிப்பும் -எல்லாமுமே பயத்தை விதைக்கும் அம்சங்களாக அமைந்திருந்தன என்று தான் சொல்ல வேண்டும்.

சிங்காரம் பிள்ளையின் சுய சரித்திரம் சுவையான புள்ளி விவரங்கள் கொண்டதாகத்தான் இருக்கும். ஆளுல் அவர் அவற்றை எல்லாம் தொகுத்து எழுதி வைக்கும் சிரமத்தை எடுத்துக் கொள்ளவில்லை. அவருக்கே குஷி ஏற்படுகிற போது ரசமாகச் சில விஷ யங்களைச் சொல்லுவார். அவரை அறிந்தவர்கள் அவ்வப்போது பிள்ளை அவர்களின் வீரப் பிரதாபங்கள் பற்றி விரிவாகப் பேசுவார்கள். எப்படியோ சிங்காரம் பிள்ளையின் கீர்த்திக் கொடி படபடக்க வாய்ப்புக்கள் கிட்டி வந்தன.

சிங்காரம் பிள்ளை சில சமயங்களில் தங்கமான மனிதர் போலப் பேசிப் பழகுவார். சின்னப் பையன் களிடம் கூட அன்பாகப் பேசுவார். வழியோடு போ கிற பையனைக் கூப்பிட்டு, ‘என்ன தம்பி, எங்கே போகிற? கடைக்கா? என்ன வாங்க! பொடியா? யாருக்கு? பெரியப்பாவுக்கா? உன் பெரியப்பா அடிக் கடி உன்னைக் கடைக்கு அனுப்புகிருரே, உனக்குக் க்ாசு கீசு தருவாரா?' என்று பரிவாக விசாரிப்பார். இல்லை என்பதற்கு அடையாளமாகப் பையன் தலையை ஆட்டினுல், பிள்ளை ச்ச்இச் என்று நாக்கைக் கொட்டு ółîfT!?” ·

'சின்னப் பையனுக இருக்கிறதே கஷ்டமான காரியம் தான். பெரியவங்க அடிக்கடி வேலை ஏவிக் கிட்டே இருப்பாங்க. சின்னப்பயல் என்ருலே தங்க ளுக்கு வேலை செய்வதற்காக இருப்பவன் என்பது தான் பெரியவங்க நினைப்பு. சின்னப் பயலாக இருந்து தான் பெரியவகை வளர வேண்டியிருக்கு. இதுதான் இந்த வாழ்க்கையிலே உள்ள குறைபாடு. ஏன் எல்லோ ரும் தீடீர்ப் பெரியவனுகளாகவே இந்த உலகத்திலே வந்து குதிக்கப்படாது? இப்படி நான் நினைப்பது வழக்கம். நானும் சின்னப்புயலாக இருந்து பெரிய

AQ?