பக்கம்:ஆண் சிங்கம்.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


சக்தியுள்ள தெய்வம்

பெருங்குளம் கிராமத்திலிருந்து ஸ்ரீவைகுண்டத்திற்குச் செல்லும் ஆறு மைல் நீள ரஸ்தா அநேக இடங்களில் நீண்டும் நெளிந்தும் பல வளைவுகளாகக் கிடப்பதுடன், நெடுகிலும் விரிந்து கிடக்கிற பெரிய குளங்களின் உயர்ந்த கரையாகவும் திகழ்கிறது. ரஸ்தாவின் ஓரங்களில் சில இடங்களில் ஆலமரங்கள் உண்டு. சில இடங்களில் கொடிக்கள்ளி மரங்கள் தலைவிரித்து நிற் கும். தென்னை அல்லது பனை ஆங்காங்கே தென்படுவதும் உண்டு. இந்த வழியின் நடு மத்தியில் இருக்கிறது ‘செவளை, செவளை’ என்று பேச்சு வழக்கில் அடிபடுகிற சிவகளை கிராமம்.

ஸ்ரீவைகுண்டத்திலிருந்து வந்தால் சிவகளைக்குள் புகும் வழியில் - பெருங்குளத்திலிருந்து வந்தால், சிவகளையைத் தாண்டிச் செல்லும் இடத்தில்-இடைஞ்ச லான வளைவும் திருப்பமுமாக ரோடு நெளிந்து கொடுக் கும். அந்த இடத்தில் ரோடு சிறிது குறுகலாக இருப்ப தோடு, இருபக்கங்களிலும் நெடிதுயர்ந்து வளர்ந்த பெரிய ஆலமரங்கள் இரண்டு உண்டு. மரங்களென்றால் சாதாரண மரங்கள் அல்ல. வயசான மரம். வட்டமிட்டு கப்புங் கவருமாகி, பூமியைத் தொடும்படி விழுதுகள் வீசி வளர்ந்து நிற்கும் மரங்கள். இருட்டின் இதயம் போலிருக்கும், அந்திவேளேயிலேயே அதன் அடியிலே. இரவில் கேட்கவா வேண்டும்?

ஒருபுறம் குளம். இந்தப் பக்கம் ஒரு பள்ளம். அவ்விடத்திற்கு வந்தவுடன் , திறமைசாலியான வண்டிக்காரன்கூட, விழித்த கண் விழித்தபடியிருந்து லாகவமாக ஓட்ட முயல்வது சகஜம். இரவில் யாருக்குமே சற்றுக் கிலிதான். காளைகள் - எவ்வளவு உயர்ந்த ரக மாடுகளாக இருந்தாலும் - ஆந்த இடத்திற்கு வந்ததும் சற்று மிரளத்தான் செய்யும் கலைகிற சுபாவமுள்ள மாடுகளானால்

9