பக்கம்:ஆண் சிங்கம்.pdf/112

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஆல்லிக்கண்ணன்

& * ,- .ps. 2 * gممر s. எங்கே போகணும் டிக்கட்...

'தம்பி இந்த லேனுக்குப் புதுசு போலிருக்கு: பிள்ளையின் குரலில் எக்காளம் கரகரத்தது.

"அதைப்பத்தி உங்களுக்கு என்ன? டிக்கட்டுக்குக் 'காசை எடுங்களேன். அலுப்பும் பொறுமையின் மையும் கண்டக்டரைச் சிடுசிடுக்கச் செய்தன.

‘சிங்காரம் பிள்ளைகிட்டே டிக்கட் கேக்கிறதுன்னு சொன்னு, அந்த ஆளுக்கு இந்த ஊரு வளமுறை தெரியாதுன்னுதானே அர்த்தம்? ஹாங்?. கடைசி ஒலிக்குறிப்பு அதட்டல் போலவும் உறுமல் போலவும் தொனித்தது.

டிரைவர் திரும்பிப் பார்த்து, அண்ணுச்சிக்கு ஒரு சிரிப்பைக் காணிக்கை செலுத்தி விட்டு, சீனு அவுக் நம்ம ஆளப்பா. அவுகளுக்கு எந்த பஸ்ஸிலும் டிக்கட் இல்லாமல் போகும் உரிமை உண்டு என்று அறிவித்தார்.

'பஸ் என்ன! பஸ் முதலாளியின் பிளஷரையே நிப்பாட்டி, ஐயாவாள் இன்ன இடத்துக்குப் போகணும்; நேரே அங்கே ஒட்டுன்னு சொன்னல், அப்படியே ஒடுமா, சும்மாவா? சிங்காரம் பிள்ளைன்னு சொன்னலே... எஹஹஹ்!'

அது பிள்ளையின் காப்பி ரைட் சிரிப்பு. அச் சிரிப்பில் எவ்வளவோ அர்த்தங்கள் பொதிந்து கிடக்கும். பிறர் காப்பி அடிக்க நினைத்து, ஆசைப் பட்டு, முயன்ருலும், காப்பி அடிக்க முடியாத ஒற்றைத் தனி ரகச் சிரிப்பு அது.

ஒழுங்கு முறைப்படி பஸ் நிற்க வேண்டாத - நிற்கக் கூடாத - ஒரு இடத்தில், ட்ரைவர் ஹோல் டர்ன்! இவர் இங்கே டெளன் ஆகிருரு: என்று கத்தினர் பிள்ளை.

சிங்காரம் பிள்ளைக்கு திடீர் திடீரென்று ஒரு ஆசை தலே தூக்கும், தனக்கும் இங்லீசு தெரியும் என்று காட்டிக் கொள்ள வேண்டும் எனும் ஆசைதான்.

110.