பக்கம்:ஆண் சிங்கம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வல்லிக்கண்ணன்


பிள்ளை சிகரெட் பின் சிகரெட்டாக ஊதிக் கொண்டு, கைலாசபுரத்தை – ஏன், இந்த உலகம் முழுவதையுமே – விலைக்கு வாங்கியவர் போல் ஒரு பெருமிதத்தோடு, மிடுக்கு கலந்த உல்லாசப் பெருமையோடு, தனிரகத் தோரணை நடை தடந்து முன்னேறினார்.

கைலாசபுரம் மனோரமா தியேட்டர் என்னும் தகரக் கொட்டகையில் அன்று விசேஷமாக ஒரு நாடகம் ஏற்பாடாகியிருந்தது. மிஸ் சந்திரபிம்பம் நடிக்கும் “தாரா – ச – சாங்கம்.’ நோட்டிசை வாங்கி, சந்திரபிம்பம் பற்றிய வர்ணிப்பையும் நாடகச் சிறப்பையும் படித்து ரிசித்த பிள்ளைக்கு அவசியம் நாடகம் பார்த்தாக வேண்டும் என்ற அவா உண்டாயிற்று. போனார்.

அவரது தம்பிகளும், வேண்டியவர்களும், தெரிந்தவர்களு மாக நிறையப் பேர் வந்திருந்தார்கள் அங்கே. ஆகவே, கும்பிடுகளும், சலாம்களும், புன்னகைகளும் அவருக்கு நிறையவே கிடைத்தன. .

நாடகத்தில் கலாட்டா தலைகாட்டக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. சுந்தரவதனா என்கிற குமாரி ஆர்மோனியம் வாசித்துக் கொண்டிருந்தாள்.

‘புள்ளே பரவாயில்லே. சிவப்பா இருக்குது. குரங்கு மூஞ்சிக்குப் பேரு சுந்தரவதனாவாம்!’ என்று சிங்காரம் பிள்ளை முணுமுணுத்தார்.

அந்த வட்டாரத்தில் தாரா.ச.சாங்கம் நாடகம் என்றாலே கண்டிப்பாகக் கலாட்டா வரும். சந்திரனுக்கு தாரை எண்ணெய் தேய்க்கும் ஸீன் பிரமாதமாக இருக்கும், காணத் தவறாதீர்கள்!’ என்று தட புடலாக விளம்பரப் படுத்துவார்கள் நாடகக்காரர்கள். கும்பலைக் கவர்ந்திழுக்க ஒரு தந்திரம் அது. நாடகத்தின்போது அந்தக் காட்சியில் மக்களை ஏமாற்ற முற்படுவார்கள். உடனே கலாட்டா வரும்.

112

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்_சிங்கம்.pdf/114&oldid=1072870" இலிருந்து மீள்விக்கப்பட்டது