பக்கம்:ஆண் சிங்கம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வல்லிக்கண்ணன்


நாடகம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. நாடகத்துக்கு ஏற்பாடு செய்திருந்தவர் சிங்காரம் பிள்ளை அண்ணாச்சியை விசேஷமாகக் கவனிக்கக் தவறினா ரில்லை. ‘பூப்போட்ட கிளாஸிலே போட்டுப் போட்டுக் கொடுத்தார் புட்டிச் சரக்கை. பிள்ளை கை நீட்டி வாங்கி வாங்கி வயிற்றுக்குள் ஊற்றிக்கொண்டே இருந்தார். தடபுடலான சாப்பாடு வேறு கிடைத்தது. பைக்குள் ‘ஏதோ ஸ்ம்திங்’ திணிக்கப்பட்டது.

பிள்ளை மிகுந்த உற்சாகத்தோடு வெற்றிப் பூரிப்போடு வீடு நோக்கி நடந்தார். அவர் வீடு சேரும்பொது இரவு இரவு இரண்டு மணிக்கு அதிகமாகவே இருக்கும்.

உறக்கத்தில் ஆழ்ந்து கிடந்த ஊர் அமைதியைப் போர்த்தியிருந்தது. அமைதியை இழந்துவிட்டவனின் மனம் போல் ஊசு காற்று அலை மோதித் தவித்தது. அது குளிரையும் சுமந்து திரிந்தது.

சிங்காரம் பிள்ளை, வீட்டு வாசல்படிமீது நின்று சற்றே தயங்கினர். தலையைச் சொறிந்தார். யோசித்தபடி நின்றார். பிறகு துணிந்து தட்டினார். கதவைத் தட்டிக்கொண்டே நின்றார்.

உள்ளிருந்து அரவம் எதுவும் எழவேயில்லை.

‘தங்கம். ஏ தங்கம்!’ அழைப்பு–தட்டுதல்... தட்டுதல்–அழைப்பு!

சில நிமிஷங்கள் தான் ஆகியிருக்கும். ஆனால் அரை மணி நேரம் ஓடியிருக்கும் என்று தோன்றியது பிள்ளைக்கு. –

‘படுத்தால், செத்த சவம் தான்... சனியன்... ஒரு பொம்பிளே இப்படியா தூங்குவா–கூப்பிடுறதும் கதவைத் தட்டுறதும் காதிலே உறைக்காமே? அவர் வாய் உரக்கவே முணமுணத்தது.

ஒரு ஆம்பிளை வீட்டுக்கு வருகிற லெட்சணம் இது தாளுக்கும்? ஒரு நாள் போலே ஒரு நாள் –

114

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்_சிங்கம்.pdf/116&oldid=1072871" இலிருந்து மீள்விக்கப்பட்டது