பக்கம்:ஆண் சிங்கம்.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வல்லிக்கண்ணன்

வெருவிப் பதறி ஆடும். மூக்கணாங் கயிறைச் சுண்டி இழுத்து, தலைப்புக்கயிறை இறுக்கிப் பிடித்து சாரத் தியம் செய்ய வேண்டியது அவசியம் என்பது வண்டிக் காரர்கள் அறிந்த வித்தையே.

பொதுவாக, இரவு பன்னிரண்டு மணி சுமாருக்கு அந்த இடத்திற்கு வரக்கூடாது என்றுதான் வண்டிக்கார்ர்கள் பிரார்த்தித்துக் கொள்வார்கள். இரவுப் பிரயாணம் தவிர்க்க முடியாததாகி விட்டால், முன்னிரவிலேயே அவ்விடத்தைத் தாண்டிவிடத் தவிப்பார்கள். அல்லது மூன்று மணிக்கு மேலே வண்டி போட்டுக்கொண்டு கிளம்பலாமே என்று காலங் கடத்துவார்கள்.

இதற்கு முக்கிய காரணம் உண்டு. ஆலமரத்தடியில் அரசு செலுத்தும் சாலைக்கரையான் ரொம்பப் பொல்லாத தேவதை, சக்தி வாய்ந்த சாமி என்பது அந்த வட்டாரத்தில் பிரசித்தமான சேதி.

பெருங்குளத்துக்குப் புதிதாக மாற்றலாகி வத்திருந்த ஸப் இன்ஸ்பெக்டர் முத்தைய பிள்ளையிடம் அவரது வண்டிக்காரன் மாடசாமி இந்த விஷயத்தைப் பணிவுடன் சொன்னபோது, பிள்ளைவாள் அட்டகாசமாகச் சிரித்தார். ‘மாடசாமி! உனக்கு இந்த முத்தைய பிள்ளைவாளைப் பற்றி ஒன்றும் தெரியாது. சக்தியுள்ள சாமிகளையே ஆட்டி வைக்கும் ஆசாமி ஐயாவாள்.தெரிஞ்சுக்கோ!’ இப்படிச் சொல்லி விட்டு பலமாகச் சிரித்தார். சிரிப்பா அது! அடித் தொண்டையிலிருந்து கிளம்புகிற மிடுக்கான கணைப்பு.

மாடசாமிக்கு நெஞ்சு ‘திக்திக்'கென்றது. மானசீகமாக சாலைக்கரையானை நினைத்துக் கும்பிடு போட்டான்.

‘ஐயா பூடம் தெரியாமச் சாமி ஆடப் பார்க்கிறாக, சாலைக்கரையானப் பற்றிக் கேவலமாப் பேசின. யாரு தான் பிழைச்சாக? நம்ம வடக்குத் தெரு காரைவீட்டுப் பிள்ளைவாள் புதுப் பணம் கிடைத்த ஜோர்லே என்ன தான் சொல்லவில்லை? சாலைக்கரைச் சாமி சும்மா விட்டுதா? புது வில்வண்டி அருமையான மாடுக.

10