பக்கம்:ஆண் சிங்கம்.pdf/121

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஆண் சிங்கம்



ஆயினும், விண் மீன்களிடையே முழுமதி போல, அழகியரிடையே தனித்தன்மை பெற்ற பேரழகி அவள். யாராக இருந்தாலென்ன! அவரிடம் ஏதோ ஒரு கவர்ச்சி இருக்கிறது. கண்டவுடனேயே காரிகையர் மோகம் கொண்டுவிட வேண்டியதுதான். வேறே வழி’ கிடையாது! இந்த அழகியும் இளநகை சிந்தி, சொகுசாகப் பார்க்கிறாள். பிறகு, தனது நினைவாக இருக்கட்டுமே என்று தூது அனுப்புவாள் போல் தன் கரு நெடுங் கூந்தலின் சுருள்கற்றை ஒன்றை அவர் பக்கம் வீசுகிறாள்...

கிருஷ்ண பிள்ளை நடந்து செல்கிறார். வெயிலாவது வெயில்! திடீரென்று ஒரு கார் அவர் அருகே வந்து நிற்கிறது. ‘ஹல்லோ மிஸ்டர் கிருஷ்ண பிள்ளை!’ என்று குயில் குரல் தேன் பாய்ச்சுகிறது அவர் செவியில், வெயிலில் நடந்து போகிறீர்களே? காரில் ஏறிக் கொள்ளுங்கள்’ என்கிறாள் காரோட்டி வந்த மோகினி. இள வயது மங்கை கண்ணுக்கு நல்விருந்து. அவள் பேச்சு கசக்கவா செய்யும்? அவர் அவள் அழைப்பை ஏற்றுக் கொள்கிறார் ‘குட்டிச் சிறு குடிலில் குமை கிறீர்களா? ஐயோ!...அருமையான பங்களா உங் களுக்குக் காத்திருக்கிறது’ என்கிறாள்...அவள் யாரோ? எங்கிருந்து வந்தவளோ? அவரை அவள் எப்படி அறிந்து கொண்டாள்? இந்தச் சில்லறை விஷயங்கள் பற்றிப் பிள்ளையின் கவி உள்ளம் ஏன் கவலைப்படவேண்டும்? கனவு காண்பது அதன் இயல்பு. கனவுகளை வளர்ப்பது அதன் உரிமை. அதன் தொழிலை அது ஒழுங்காகச் செய்தால், குறுக்கே விழுந்து யார் தடுக்க முடியும்...?

பெரிய பஸ் ஓடிக் கொண்டிருக்கிறது. கிருஷ்ண பிள்ளை ‘ஜாலி மூடி'ல் இருக்கிறார், பஸ்ஸின் பின்புறம் நின்று ஒரு பஸ்ஸைப் பிடித்து இழுக்கிறார் பஸ் ஒட இயலவில்லை. அதன் சக்கரங்கள் சுழன்று கொண்டு தான் இருக்கின்றன. ஆயினும் பஸ் முன்னேற முடியாது திணறுகிறது. வீமன், ஹெர்குலிஸ் போன்ற பலசாலிகளின் தம்பியாகி விட்டார் கி. பிள்ளை. அவர் விளையாட்டாகப் பிடித்திழுத்து நிறுத்தியிருக்கிற

119