பக்கம்:ஆண் சிங்கம்.pdf/123

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஆண் சிங்கம்அப்படிச் சொல்லக் கூடியவர்களுக்காக அனுதாபமே கொள்வார் அவர். ‘மலரினில், நீலவானில்,மாதரார் முகத்திலெல்லாம் அழகினை வைத்தான் ஈசன்’ எவனோ ஒரு ஓவியன் காண்பதற்காக என்று ஒரு மகாகவி பாடியிருக்கிறார், அந்தக் கலைஞன் மட்டும்தான் ரசிக்க வேண்டுமென்பதில்லை. கண்ணும் மனமும் காலமும் பெற்ற எவரும் ரசித்து மகிழலாம், கிருஷ்ண பிள்ளை இம் மூன்றையும் பெற்ற பாக்கியசாலியாக்கும்’ என்று கிருஷ்ண பிள்ளையே உற்சாகமாகச் சொல்லுவார்.

கவிஞர்கள் பிறருக்குப் பைத்தியக்காரத்தனமாகத் தோன்றும் காரியங்களைச் செய்வதில் ஆர்வம் உடைய வர்கள் என்று சொல்லப்படுவது உண்டு. கிருஷ்ண பிள்ளை வாழும் கவிஞர் என்பதை அவரது செய்ல்கள் நிரூபிக்கும்.

பொதுவாகப் பலரும் மாலை நேரங்களில், முன்னிரவில், கடற்கரை செல்வார்கள். பிள்ளையோ காய்கதிர்ச் செல்வன் அனல் அள்ளிச் சொரிந்து கொண்டிருக்கும் பட்டப் பகலில் பீச்சுக்குப் போய் சுடுமணலைக் கடந்து, ஐஸ் மாதிரி ஜில்லென்று இருக்கும் அலை நீரில் நின்று களிப்பார். சாயங்காலம் அறை தேடி வ்ந்து முடங்கிக் கிடப்பார். மழை ‘சோ’ என்று பிடித்து விளாசும்போது, கடல் மணலில் ஹாயாக உலாவித் கொண்டிருப்பார். எதையாவது பார்த்துவிட்டு, அல்லது எண்ணிக் கொண்டு, ‘ஆகா, இந்த நேரத்தில் நான் உயிரோடிருப்பதற்காக நான் மிகவும் ஆனந்திக்கிறேன்... ஆகா, வாழ்வது அதிர்ஷ்டமான விஷயம் தான்’ என்பார். குதூகலம் கும்மாளியிடும் அவர் பேச்சிலே. அவருடைய மனப் பண்பு மற்றவர்களுக்கு–அவரோடு நன்கு பழகியவர்களுக்குக் கூட–புரியவில்லை என்றால் அவர் என்னதான் செய்ய முடியும்?

‘கிருஷ்ண பிள்ளை வறண்ட பேர்வழி. அவர் வாழ்க்கையும் வறட்சியானதே’ என்று, அவரை அறிந் தவர்கள் சிலர் அபிப்பிராயப்படுவது உண்டு. கோலக் கோதை துணையோடு குளுகுளு வாழ்க்கை அவர் வாழ வில்லை; எந்த ஒரு பெண்ணும் அவரைக் காதலித்த

121