பக்கம்:ஆண் சிங்கம்.pdf/124

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வல்லிக்கண்ணன்


தாகத் தெரியவில்லை; அவரும் காதலின்பம், இல்லறம் என்றெல்லாம் பேசுவதில்லை என்பதனாலேயே அவர்கள் அவ்விதம் கருதினர். பிள்ளையின் புற வாழ்வைக் கொண்டே அவர்கள் அவ்விதம் மதிப்பிட்டனரே தவிர அவர் அவருக்காகத் தனியானதொரு அகவாழ்வு வாழ் கிறார் – அவரால் அப்படி வாழ முடியும் – என எண்ணினரல்லர்.

கிருஷ்ண பிள்ளைக்கு நாற்பது வயதுக்கும் அதிகமாகி விட்டது. அவர் கல்யாணம் செய்துகொள்ளவில்லை. கல்யாணம் செய்து கொண்டு எல்லோரையும் போல் வாழ்க்கை நடத்த வேண்டும் என்ற ஆசை தமக்கு இருப்பதாக அவர் காட்டிக் கொண்டதுமில்லை. சில உல்லாசிகளைப் போல் ஜாலி வாழ்வு வாழும் பண்பு பெறவுமில்லை அவர். அவருக்குச் சிநேகிதர்கள் என்று இரண்டு மூன்று பேர்கள் இருந்தார்கள். சிநேகிதி என்று ஒருத்தி கூட அவர் வாழ்க்கைப் பாதையில் குறுக்கிடவில்லை. இதெல்லாம் அவரைத் தெரிந்தவர்களுக்குத் தெரியாதா என்ன?

கிருஷ்ண பிள்ளையின் நண்பர் நாராயணனுக்கும் இது தெரியும். ‘வறண்ட மனம் பெற்றவர் இவர்’ என்று நம்புகிறவர்களில் அவரும் ஒருவர். வறண்ட கோடை போன்ற பிள்ளை வாழ்வில் அவ்வப்போது குளுமை பரப்புகின்ற மென் காற்று தாமே தான் என்ற எண்ணம் அவருக்கு அடிக்கடி பிள்ளையைத் தேடி வந்து உற்சாகமாக உரையாடிச் செல்வார் அவர்.

அன்றும் நாராயணன் வந்தார். வழக்கம்போல் கிருஷ்ண பிள்ளை சோம்பிக் கிடப்பார், அல்லது, புத்தமும் கையுமாய்க் காட்சி தருவார் என்று எண்ணிக் கொண்டு தான் வந்தார். ஆனால் அவர் எதிர்பாராததை – எதிர்பார்க்க முடியாததை – அன்று காண நேர்ந்தது; பிறகு கேட்கவும் நேர்ந்தது.

அலமாரியிலிருந்தும் பெட்டிகளிலிருந்தும் புத்தகங்களை வெளியே எடுத்து எங்கும் பரப்பியிருந்தார் கிருஷ்ணபிள்ளை. அவற்றிடையே ஏதோ எண்ண ஓட்டத்தில் தம்மை இழந்தவராய் அவர் காணப்பட்

122