பக்கம்:ஆண் சிங்கம்.pdf/125

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளதுஆண் சிங்கம்

டார். இத் தோற்றம் நாராயணனுக்கு ஆச்சரியம் அளித்தது. அதைவிட அதிக வியப்பாகத் திகழ்ந்தது, பிள்ளை தமது கையில் வைத்திருந்த ஒரு பொருள்.

அழகான சங்கிலி. சிறு சிறு மாம்பிஞ்சுகளைக் கோத்து மாலையாக்கியது போன்ற சங்கிலி மஞ்சளாக மினுமினுத்தது. பொன் போல் தோன்றும் பொருள். ஆனால் தங்கமல்ல. நாகரிகப் போலி அணிகளில் ஒன்று. அது பூரணமாகவுமில்லை. அது பட்டு நீளமாய் இருந்தது. புது மெருகுடன் பள பளக்கவுமில்லை அது. நாள் பட்டது போல் மங்கிப் பொலிவு குன்றிக் காணப்பட்டது.

இதை ஏன் இவர் இப்படிப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்? என்று குறுகுறுத்தது நாராயணன் மனம். என்னய்யா அது? பொன் சங்கிலி மாதிரி இருக்கு. ஏது உமக்கு? என்று அவர் விசாரித்தார்.

கையிலிருந்த சங்கிலியைப் பார்த்தார் கிருஷ்ண பிள்ளை. நண்பரின் முகத்தைப் பார்த்தார். தொடர்ந்து அவர் கண்கள் வெறும் வெளியில் நீந்தின. பிறர் பார்க்க முடியாத எதையோ நோக்குவன போல் அவை நிலைபெற்று நின்றன. அவர் நீண்ட பெருமூச் செறிந்தார்.

என்னய்யா, என்ன விசேஷம்?’ என்று நண்பர் கேட்டார்.

‘அலமாரி பெட்டியை யெல்லாம் சுத்தப் படுத்த ஆரம்பித்தேன். ஒரு பெட்டியில் புத்தகங்களுக்கிடையே ஒரு காகிதப் பொட்டலம் கிடந்தது. என்னடா என்று பார்த்தால், இந்தச் சங்கிலி. இது அங்கே இருக்கும் என்ற நினைப்பே எனக்கில்லை, திடீரென்று இதைப் பார்க்கவும், அடுக்கடுக்காய்ப் பழைய நினைவுகள் எழுந்து, உள்ளத்தில் கிளர்ச்சி உண்டாக்கி விட்டன என்று கூறிய பிள்ளை மீண்டும் பெருமூச்சு விட்டார். கனவுக் காட்சிகளைக் கண்முன் கொண்டு வர முயல்கிறவர் போல் யோசனையில் ஆழ்ந்து விட்டார

123