பக்கம்:ஆண் சிங்கம்.pdf/126

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வல்லிக்கண்ணன்

பிள்ளையின் போக்கு நண்பருக்கு அதிசயமாகப் பட்டது. என்ன விஷயம் என அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது. இது யார் சங்கிவி? என்று கேட்டார்.

'உம்மிடம் சொல்வதற்கென்ன? என்று முன்னுரை கூறிஞர் கி. பிள்ளை. நான் இதுவரை யாரிடமும் சொன்னதில்லை. அந் நினைவுகளை நான் மறந்து விட ஆசைப்பட்டேன். என் மனக்குகை ஆழத்தில் அது புதையுண்டு விட்டதாகவே தோன்றியது. ஆளுல் இந்தச் சங்கிலி அந் நினைவைப் படம் எடுத்து ஆடவைக் கும் மகுடியாகி விட்டதே!... -

மீண்டும் ஒரு பெருமூச்சு. நாராயணன் பார்வை அவரை அதிசயமாகவும், புதிதாக ஒருவரைப் பார்ப் பது போலவும் தொட்டது. அதைப் பொருட்படுத்தா மல் கிருஷ்ணபிள்ளை பேசினர். தமது நினைவுகளை உரக்கச் சிந்திப்பவர் போல், தமக்குத் தாமே பேசிக் கொள்ளும் தொனியில், அவர் சொல்லலானர்.

'இப்போ சமீபத்தில் நிகழ்ந்தது போல் இருக்கு. யோசித்துப் பார்த்தால், பதினைத்து, பதினறு வருஷங் கள் ஒடியிருப்பதாகப் புரிகிறது...ஊம்! காலம் ரொம்ப வேகமாகத் தான் ஒடுகிறது. அப்பொழுது எனக்கு இரு பத்தாது வயசு, உமாவுக்கு என்ன, பதினேழு பதி னெட்டு வயதிருக்கும். இருந்தாலும் அவள் சிறுமி தான். சரியான விளையாட்டுப் பிள்ளை...!"

'உமாவா? யார் அது? நான் அவளைப் பார்த்திருக் கிறேளு? என்று கேட்டர் நாராயணன்.

'நீர் பார்த்திருக்க முடியாது. நான் அப்பொழுது வேருெரு ஊரில் தங்கியிருந்தேன். ஏதோ அழுது வடிந்த ஆபீஸ் ஒன்றில் என்னவோ இழிவெடுத்த உத்தி யோகம் என்று வைத்துக் கொள்ளுமேன் ஆபீஸ், மேஜை, நாற்காலி எல்ல்ா ஜபர்தஸ்துகளுக்கும் குறை எதுவும் கிடையாது. அதிகாரி என்று ஒருவர் இருந் இார். அவரோ வருஷத்தில் முக்கால் வாசி நாள் லீவில் போய் விடுவார். பியூன் ஊர் சுற்றப் போய் விடு

翠羅瑩