பக்கம்:ஆண் சிங்கம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆண் சிங்கம்

வான். நான் மட்டும் தான். தனிக்காட்டு ராஜா என்பார்களே, அது மாதிரி. நான் சோம்பேறியாக வளர்ந்ததற்கு இப்படிப்பட்ட உத்தியோகங்களே எனக்குக் கிடைத்து வந்ததும் முக்கிய காரணமாக இருக்க வேண்டும்.

ஆபீஸ் இருந்த வீட்டை ஒட்டி இன்னொரு வீடு. இரண்டுக்கும் ஒரே வராண்டா. அந்த வீட்டை ஒளி யுறுத்திக் கொண்டிருந்தவள் தான் உமா என் வாழ் விலும் மின்னல் போல் பளிச்சிட்டு மறைந்த பெருமை அவளுக்கு உண்டு. நான் எப்பொழுதும் போல் தான். சதா ஏதாவது ஒரு புத்தகத்தைக் கையில் வைத்துக் கொண்டிருப்பது வழக்கம். அந்தப் பெண் அடிக்கடி கவனித்திருக்கக் கூடும். ஒருநாள் ஒரு சிறுவன அனுப்பி, படிப்பதற்குப் புத்தகம் வேண்டும் என்று கேட்டாள். கொடுத்தேன். இரண்டொரு நாள் பையன் வந்து போனான். பிறகு அவளே நேரில் வாசல்படி மீது வந்து நின்று புத்தகம் கேட்கத் துணிந்தாள். அப்புறம் மேஜை அருகிலேயே வர ஆரம்பித்தாள். படித்த கதைகளைப் பற்றி உரையாட முன்வந்தாள். பின், வம்பாடுவதில் உற்சாகம் காட்டினாள். திடீரென்று ஒருநாள் டம்ளரும் கையுமாக அழகுநடை நடந்து வந்தாள். ‘இப்ப நான் என்ன கொண்டு வறேனாம்’ என்று குழைவுக் குரலில் இழுத்தாள்,

‘எனக்கெப்படித் தெரியும்? ஃபஸ்ட்கிளாஸ் காப்பியாக இருந்தால் ரொம்ப நன்றி சொல்வேன்’ என்றேன்.

வேறு எதுவாகவாவது இருந்தால் சாப்பிட மாட்டீர்களா? என்றாள் அவள். அவள் முகத்தில் சிறிது வாட்டம் படர்ந்தது. உங்களுக்குப் பாயசம் பிடிக்காது?’ என்று தயங்கியபடியே கேட்டாள்.

‘பேஷாகப் பிடிக்குமே!’

‘இன்று எங்கள் வீட்டில் விசேஷம். இந்தப் பாயசம் நானே தயாரித்ததாக்கும்’ என்று உமா டம்

125

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்_சிங்கம்.pdf/127&oldid=1071239" இலிருந்து மீள்விக்கப்பட்டது