பக்கம்:ஆண் சிங்கம்.pdf/128

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வல்லிக்கண்ணன்


ளரை நீட்டினாள். நான் பருகி முடிக்கும் வரை பார்த்தப டி நின்று விட்டு, ‘எப்படி இருக்கிறது?’ என்று ஆவலோடு கேட்டாள்.

‘உன்னைப் போல் இருக்கிறது – ஜோராக, உன் பேச்சைப் போல் இனிச்சுக் கிடக்குது’ என்றேன்.

‘ஐயே மூஞ்சி! என்று சொல்லி, டம்ளரைப் பிடுங்கிக் கொண்டு ஒடினாள். அவளுக்குக் கோபம் இல்லை. ஆனந்தம் தான் என்பதை அவள் முக மலர்ச்சியும், துள்ளலும் குதிப்பும் காட்டிக் கொடுத்தன.

இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாய் இது வளர்ந்து வந்தது. அடிக்கடி காப்பி, கேசரி, பாயசம் என்று எதையாவது எடுத்து வந்து, ‘நான் செய்ததாக்கும். நான் செய்தேன்’ என்று விநியோகம் பண்ணுவாள். என் புகழ்ச்சியை ஆவலோடு எதிர்பார்ப்பாள். நாளடைவில் அவள் ஒரு தொல்லையாகவே மாறி விட்டாள். ‘ஓயாமல் என்ன படிப்பு? நான் தலையைக் காட்டியதுமே புத்தகத்தை மூடி விட வேண்டாமா? என்று சொல்வி, நான் படிக்கும் புத்தகத்தைப் பிடுங்கி வீசி விடுவாள். எனக்கு வரும் கோபத்தைக் கண்டு கலகலவெனச் சிரிப்பாள். உமாவின் போக்கு எனக்கு வருத்தம் அளித்தாலும் அவள் பேச்சும் சிரிப்பும் மிகுந்த மகிழ்வுதான் தந்தன.'இன்பக் கதைகள் எல்லாம் உன்னைப் போல் ஏடுகள் சொல்வதுண்டோ?’ என்று அவள் கன்னத்தைத் தட்டி, விளையாட்டாகக் கிள்ள வேண்டும், நீண்டு தொங்கும் பின்னலைப் பிடித்திழுக்க வேண்டும் என்ற துடிப்பு எனக்கு எழும். அதைத் தடுத்து விடும் உறுதி எனக்கு இருந்ததுமில்லை. ஆ, சென்றுபோன அந்த இன்ப நாட்கள்!’

கிருஷ்ண பிள்ளை நினைவுச் சுழலிலே சிக்கி விட்டார் என்று தோன்றியது. சிறிது நேரம் ஒன்றுமே பேசாமல் இருந்தார் அவர்.

‘சரி ஐயா, இந்தச் சங்கிலியைப் பற்றிக் கேட்டால் நீர்பாட்டுக்கு அளக்க ஆரம்பித்து விட்டீரே?’ என்று கெண்டை பண்ண ஆசைப்பட்டார் நாரா

126