பக்கம்:ஆண் சிங்கம்.pdf/129

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஆண் சிங்கம்

யணன். மனுசன் வள்னு எரிஞ்சு விழுந்தாலும் விழுவான்! அவன் போக்கிலேயே சொல்லட்டுமே' என்று அவர் மனம் லகானச் சுண்டியது.

கிருஷ்ண பிள்ளை தொடர்ந்து சொன்னுர்: "ஒரு சமயம் நான் சுவாரசியமாக ஒரு புத்தகம் படித்துக் கொண்டிருந்தேன். உமா பூனை போல் வந்திருக் கிருள். அது எனக்குத் தெரியாது. படிரென்று புத் தகத்தைப் பிடித்து இழுக்கவும் நான் திடுக்கிட்டேன். அவள் விஷமச் சிரிப்போடு அதை வெடுக்கென்று பிடுங்கினுள். நான் பலமாகப் பற்றியிருந்தேன். எங்கள் பலப் பரிசோதனையில் நடுவே திண்டாடிய புத்தகத்தில் ஒரு தாள் கிழிந்து விட்டது. அருமை யான புத்தகம் பாழாகி விட்டதே என்ற ஆத்திரம் எனக்கு. வெறி உணர்வோடு அவள் கன்னத்தில் ஓங்கி ஒர் அறை கொடுத்தேன். சனியன்! படிக் கையிலே வந்து தொந்தரவு கொடுப்பது மில்லாமல் புத்தகத்தை வேறே நாசமாக்கி விட்டதே' என்று முணுமுணுத்தேன். அவள் முறைத்து நோக்கிளுள். அதற்காக இப்படித்தான் பேய் மாதிரி அறையணு மோ? சாந்தமாகச் சொல்றது!’ என்று முனகிவிட்டு வெளியேறிவிட்டாள்.

கிழிபட்ட புத்தகத்தைப் பார்க்கப் பார்க்க எனக்குக் கோபமும் ஆத்திரமும் இருந்த போலுேம், அறிவு தன் குரலைக் காட்டலாயிற்று. அவளை த கன் அடித்தது தப்பு. கை நீட்டி அடித்திருக்கக் கூடாது. அந்நியளான ஒரு பெண்ணைத் தொட்டு அடிப்பது என்ருல் மற்றவ்ர்கள் என்ன சொல்ல மாட்டார்கள்? என்றெல்லாம் என் எண்ணமே என்னைச் சுட்டது. அதல்ை மனக் குழப்பமும் வேதனையும் ஏற்பட்டன. எனக்கு வேறு வேலையே ஒடவில்லை. அவளே நினை வாகி என் உள்ளத்தை நிறைத்து நின்ருள். அவள் திரும்பவும் வந்ததும் அவளிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று நினைத்தேன்.

அவள் பிறகு அன்று முழுதும் எட்டிப் பார்க் கவே யில்லை. மறு நாளும் உமா வரவில்லை. அடிக் கடி வந்து, விளையாட்டுகள் காட்டி, இனிக்க இனிக்

127