பக்கம்:ஆண் சிங்கம்.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஆண் சிங்கம்

அந்த இடத்திலே வரும் போது, குடை வண்டி சாஞ்சு, பிள்ளைவாள் பிழைச்சது மறுபிழைப்பில்லையா! ஐயா ஸ்ப் இனிஸ்பெக்டர்னு சாமிக்கு என்னங்ங்ேன்? அது சக்தியுள்ள தெய்வமில்லா!' எ ன் று முனங்கிக் கொண்டான். அதுக்காக, தான் வண்டி ஒட்டி வர முடியாது என்று சொல்லிவிட முடியுமா? வயிறு கழுவ வேலை பார்த்தாக வேண்டுமே.

தன் குலதெய்வங்களே யெல்லாம் கும்பிட்டுக் கொண்டு, சாலைக்கரையானையும் நூறு த ட ைவ நினைத்துக்கொண்டு, வண்டியில் காளைகளைப் பூட்டி ஞன். அந்தக் காளைகளே ஒட்டிச் செல்வதென்ருலே தனி குஷி. நல்ல போவிப்பில் அருமையாக வளர்ந்த கருஞ் செவலைக் காளைகள். கழுத்திலே இரண்டிரண்டு வெண்கல மணிகள். நாதம் கணிரென்று கேட்கும். கால் மைலுக்கப்பால் வண்டி வரும்போது இன்ஸ் பெக்டர் பிள்ளைவாள் வண்டி வருது என்று காட்டிக் கொடுத்துவிடும். மாடுகளோ மணி மணியானவை. குறிப்பறிந்து போகும். சாட்டைக் கம்பின் பிர யோகம் தே ைவயே இல்லை. ’த்தா...இந்தாலே’ என்று அதட்டினல், துாள் பறக்கும்படி ஒடும். இவற்றில் 'இடத்தன் காளை பரமசாது. வலத்தன் கொஞ்சம் திமிரு பிடித்தது. மோட்டார் விளக்குகளைக் கண்டால் சிறிது மிரளும். ஆனல் எந்த இருட்டாக இருந்தாலும் சரி, தானகவே தடமறிந்து நடக்கக் கூடிய மாடுகள் ←jö©1 ·

என்ருலும், அன்று வண்டி பூட்ட அவனுக்குச் சம்மதமே யில்லை. நாளே க்கு ப் போனுல் என்ன, எசமான்? என்று கேட்டான்.

'சர்க்கார் சோலி பெரிசா? உன் சாமிபயம் பெரிசா? வண்டியைப்போடு. வீணுக நேரத்தை ஒட்டியடைச்சுக் கிட்டிராதே' என்று உறுமிஞர் பிள்ளை.

அவருக்குக் கோபம் வந்தால் ‘கண்ணு மூக்குத் தெரியாது. கையிலே அகப்பட்டதை எடுத்து க் கொண்டு வெளும்பச் சாத்தி விடுவார். விளாசு விளா சென்று விளாசித் தள்ளி விடுவார். 'முரட்டு முத்தைய

. . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்_சிங்கம்.pdf/13&oldid=543072" இருந்து மீள்விக்கப்பட்டது