பக்கம்:ஆண் சிங்கம்.pdf/131

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஆண் சிங்கம்

ஆரமாக்கியது போன்ற இந்தச் சங்கிலி அவள் கழுத் தைச் சுற்றி மின்னி அழகு செய்தது. என் கண்கள் மகிழ்வின் சுடரொளி காட்டின. ‘ஆகா, ரொம்ப அழகாக இருக்கிறது. உமா, ஜம்மென்று, ஜோராக இருக்கு’ என்று பாராட்டினேன்.

அவளுக்கு மகிழ்ச்சியாவது மகிழ்ச்சி! நீரூற்று போல் பொங்கிப் பொங்கி வழிந்தது குதூகலம். அவளே கும்மாளமிட்டுக் குதிகுதி என்று குதித்தாள். ஆடிப் பாடினாள் அந்த உற்சாகத்தில் அவள் என்னவோ சேட்டை செய்யவும் எனக்கு எரிச்சல் வந்தது. என் ஆத்திரத்தைத் தூண்டி ஆனந்தம் அடைய விரும்பியவளாய் அவள் மேலும் விஷமம் செய்தாள். நான் அவள் தலைப் பின்னலைப் பிடித்து இழுத்து, மண்டையில் நறுக்கென்று ஓங்கிக் குட்டுவதற்காகக் கை வீசினேன். அவள் இரட்டைப் பின்னல் போட்டு, ஒன்றைக் கழுத்தின் பக்கமாக முன்னே துவள விட்டிருந்தாள். வேகத்தில் என் கை கழுத்துச் சங்கிலியையும் சேர்த்து இழுத்து விட்டது. சங்சிலி அறுந்து போயிற்று. இதை நானோ, அவளோ எதிர்பார்க்கவில்லை.

முழுதலர்ந்த பெரிய புஷ்பம் போல களி துலங்கப் பளிச்சிட்ட அவள் முகம் அனலில் சுடப் பெற்ற கத்திரிக்காய் மாதிரிச் சுருங்கிக் கறுத்தது. அவள் கண்களில் நீர் வழிந்தது. உதடுகள் துடித்தன. என் சங்கிலியை அறுத்து விட்டீர்களே. அம்மாவிடம் நான் என்ன சொல்வேன்?’ என்று துயரத்தோடு முணுமுணுத்தாள் உமா.

என் புத்தகத்தை அவள் கிழித்துவிட்டாள் என்று நான் அடைந்த கோபமும் வெறியும் என் நினைவில் மின்வெட்டின. அவள் இப்போது சீறிப் பாய்ந்திருக் கலாம். வெகுண்டு ஏசியிருக்கலாம். வெறியோடு எதையாவது எடுத்து என் மூஞ்சியில் வீசி அடித் திருக்கலாமே. அவள் அவ் வேளையில் எது செய்தாலும் அது நியாயமாகத் தான் இருந்திருக்கும். ஆனல் அவளோ வேதனையால் குமைந்து குமுறினாள். கண்ணீர்

129