பக்கம்:ஆண் சிங்கம்.pdf/133

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஆண் சிங்கம்என்பதெல்லாம் உண்மையாகவே செயல்படுகின்றனவா?

இவ்வாறு அடிக்கடி என் மனம் உளையும். எனது வாழ்வே அர்த்தமற்றுப் போனதாகத் தோன்றியது. உமாவோடு நிகழ்ந்த கடைசிச் சந்திப்பு வேதனை தந்ததாக அமைந்ததே என்ற வருத்தம் வேறு. எனக்குப் பைத்தியம் பிடித்துவிடும் போலிருந்தது. நான் அந்த ஊரைத் துறந்து எங்கள் சொந்த ஊரை அடைந்தேன். அமைதி என்பதை அறியமுடியாத சுழல் காற்றைப் போல் அங்குமிங்கும் அலைந்து திரிந்தேன். பலப்பல வேலைகளைப் பார்த்தேன். காலம் எனும் வைத்தியன் என் மன வியாதியை ஒருவாறு குணப்படுத்தினான். ஆயினும் நான் உமாவை முற்றிலும் மறந்தவனல்லன். அவள் நினைவு கோயில் கொண்டு விட்ட என் உள்ளத்திலே வேறு எந்தப் பெண்ணுருவமும் எட்டிப் பார்த்து இடம் பிடிக்க முடியவில்லை......’

கிருஷ்ண பிள்ளை பெருமூச்செறிந்தார். ‘இந்தச் சங்கிலியை ஏதோ ஒரு பெட்டியில் போட்டிருந்தேன். அதை நான் மறந்தே போனேன். இன்று தற்செயலாக இது என் கையில் கிட்டியது’ என்றார்,

காவியத்தில், கதைகளிலே வருவதுபோல் இருக்கிறது. சாதாரண நபராகத் தோன்றும் உம்முடைய வாழ்வில் கூட சோக காவியம் அரங்கேறி, திடுமென முற்றுப் பெற்று விட்டது போலும்! அல்லது, இன்ப நாடகம் தொடக்கமாகிச் சோகக் கதையாக முடிந்து விட்டது என்று சொல்லலாம்’ என்று நாராயணன் கூறினர். ‘எனக்கு உம் மீது பொறாமை உண்டாகிறது ஐயா. உண்மையாகத் தான் சொல்கிறேன். உம்மை ஒருத்தி காதலித்தாள். காதலித்த பெண்ணுக்காக நீர் உமது வாழ்க்கையையே தியாகம் செய்து கொண்டிருக்கிறீர். இச் சங்கிலி–புனிதமான காதல் சின்னம்–ஒரு காவியப் பொருளாகவே தோற்றம் அளிக்கிறது என்றார். இன்னும் விரிவாகப் பேசிவிட்டுப் போனார்.

131