பக்கம்:ஆண் சிங்கம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஆண் சிங்கம்


அவர் கேட்டவற்றை எழுத்தாளர் கொடுக்கத்தான் செய்தார்.

யார் யாரோ புதுசு புதுசாகப் பத்திரிகை ஆரம்பித்துக் கொண்டுதான் இருந்தார்கள்.

நடத்தும் பத்திரிகையை நிறுத்திவிட மனமில்லாத எவராவது விடாது பிழைப்பை நடத்திக் கொண்டுதான் இருந்தார்கள்.

எப்பவாவது எவராவது விசேஷ மலர் வெளியிட்டுக் கொண்டுதான் இருந்தார்கள்

அவர்கள் எல்லோருக்கும் ஞானப்பிரகாசம் தெரிந் தவராய், ‘வேண்டிய மனிதர்’ ஆகத்தான் இருந்தார்.

அவர்கள் நேரிலே கண்டு கேட்டார்கள். ஆள் அனுப்பிக் கேட்டார்கள். தபால் மூலம் கேட்டார்கள்.

வேண்டியவற்றைப் பெற்றார்கள். ஏனெனில் எல்லோருக்கும் ‘ரொம்ப வேண்டியவர்’ ஆக விளங்கினார் எழுத்தாளர் ஞானப்பிரகாசம்.

காலம் ஓடியது.

பத்திரிகைகள் பிறந்தன. தவழ்ந்தன. நடந்தன. படுத்தன. சில எழுந்து நின்றன. பல தோன்றின– ஞானப்பிரகாசம் எழுதிக் கொண்டேயிருந்தார்.

அவர் எழுத்தாளர் இல்லையா? ஆகவே, அவர் சுத்த சோம்பேறியாகவும் இருந்தார். இதில் அதிசயம் எதுவுமில்லை.

அவர் எழுத்தைப் பிழைப்பாக ஏற்றிருந்தார். ஆதலின் அவர் பிழைப்பு ஒழுங்காக_நடக்கவில்லை, அவரது பொருளாதாரம் படுவறட்சி என்ற அந்தஸ்தை எட்டியது. அவர் எண்ணிப் பார்த்தார். கதை கட்டுரைகள் அனுப்பிக் காசு பெற முயன்றார், வெளியான கதைகளுக்குப் பணம் தருவதாகச் சொல்லி

135

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்_சிங்கம்.pdf/137&oldid=1072886" இலிருந்து மீள்விக்கப்பட்டது