பக்கம்:ஆண் சிங்கம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வல்லிக்கண்ணன்

வண்டி போடும் போதே மாடசாமிக்குத் திகில் தான். வண்டி புறப்படும்போது சகுனம் சரியில்லை’ என்று அவிழ்த்துப் போட்டுவிட்டு, கால் மணி நேரம் கழித்துப் பூட்டினான்.

“சரி. போயிட்டு வாறேன்’ என்று சொல்லி வண்டி யிலேறினார் பிள்ளை.

அப்போது பக்கத்து வீட்டிலே எவளோ ஒருத்தி தன் மகனுக்கு வாழ்த்து பாடிக் கொண்டிருந்தாள் : ‘கரி முடிஞ்சு போவான், நீ ஏன் இந்தப் போக்கு போறே?

பிள்ளை காதில் இது விழுந்ததோ என்னவோ! மாடசாமி தெளிவாகக் கேட்டான். அதற்கு மேல் கேட்க விடாமல் வண்டி கடகடத்து உருண்டது. மாட்டு மணிகள் கணீரிட்டன. நிமித்திகங்களில் நம்பிக்கை குன்றாத மாடசாமி நல்ல நிமித்தமாகயில்லையே. இன்னைக்கு நல்லபடியாக வீடு போய்ச் சேரனும், தெய்வமே என்று நினைத்து, தனக்குத் தெரிந்த தெய்வங்களேயெல்லாம் வேண்டிக்கொண்டான். சாலைக் கரையானுக்கு விசேஷ வேண்டுதல்,

“அப்பனே, சாலைக்கரையா, நான் புள்ளை குட்டிக் காரன். நீதான் காப்பாத்தனும். கடைசிச் செவ்வா யன்னேக்கு உனக்குச் சேவல் கொண்டாந்து பலியிடு தேன்’ என்று நேர்ந்துகொண்டான். கோசுப் பெட்டி லுள்ளிருந்த திருநீறையெடுத்து நெற்றி நிறையப் பூசிக் கொண்டான். வண்டியை வேகமாக ஒட விட்டான்.

முத்தைய பிள்ளை ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தா ர். சாதாரண நாளாக இருந்திருந்தால் சாப்பாடு வெறும் தோசையும் உப்புமாவுமாக முடிந்திராது. ‘தண்ணி', கோழிமுட்டை வெந்தது, புறாக்கறி யென்று நண்பர் வீட்டிலே விருந்து அமர்க்களமாயிருக்கும். சனியன் அமாவசையாக அல்லவா போச்சு! தரித்திரம் புடிச்ச எழவு’ என்று மனம் வருந்திக் கொண்டிருந்தது அவருக்கு. திடீரென்று சாட்டையின் சுளிர் அடி அவ ரைத் திடுக்கிடவைத்தது.

14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்_சிங்கம்.pdf/16&oldid=1071123" இலிருந்து மீள்விக்கப்பட்டது