பக்கம்:ஆண் சிங்கம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஆண் சிங்கம்

மாடசாமி மாடுகளைத்தான் அடித்தான். அவரையே அடித்துவிட்டது போலிருந்தது. பிள்ளைக்கு மாடுகளிடம் அவ்வளவு உயிர்.

‘ஏயேய்! என்னது இது? ஏணிப்படி விரட்டு விரட்னு விரட்டுதே? மாடுகளை ஏன் அடிக்கிறே? என்று சீறினார். அதோடு சாட்டைக் கம்பை இப்படிக் கொடு மாடுகதான் தானகவே வேகமாய் போகுமே. நீ எதுக்காக அடிக்கனும்? என்று கம்பை வாங்கி உள்ளே போட்டுக் கொண்டார்.

நல்ல இருட்டு. பனி வேறு அதிகம். குளிர் காற்று லேசாக நெளிந்து கொண்டிருந்தது. பாதை நெடுகிலும் சிள் வண்டுகள் ‘விவிங்ங்’ என்று இரைந்து கொண்டிருந்தன. இருட்டில் ரஸ்தா மட்டும் வெளே ரென்று தெரிந்தது. வானத்திலே, கன்னங் கரிய வெல்வெட்டில் அருவக் கரம் ஏதோ தைத்துவிட்ட ஜிகினாப் பொட்டுகளும் புள்ளிகளும்போல நட்சத் திரங்கள் நிறைந்து கிடந்தன. அந்த ரஸ்தாவில் வண்டி தனியாகப் போய்க்கொண்டிருந்தது. வண்டியின் இருப் புச் சட்டத்தின் அருகில் போலில் கட்டியிருந்த அரிக்கன் லாந்தரின் ஒளி, தீ நிற வட்டம் வரைந்து ஒடுங்கி, இருளின் எல்லையை அதிகமாக்கிக் காட்டியது. வண்டி யின் ஒட்டத்துக்கேற்ப ஒளி வட்டம் ஆடி அசைந்தது. அந்த ஒளியின் உதவியால் மாடுகளின் கரிய நிழல் பெரிதாகத் தெரியும். மாடசாமி பயம் அரிக்கும் நெஞ்சினனாய் இருந்தான். முத்தையபிள்ளை கண்களை மூடியபடி தலையணையில் சுகமாகச் சாய்ந்திருந்தார்.

வண்டி இரட்டை ஆலமரங்களை நெருங்கிக் கொண் டிருந்தது.

இருளைக் கிழிக்க முயன்று முடியாமல், தானும் பேரிருளாய் கலந்துவிட்டது போல் இருளோடு இருளாக நின்றன மரங்கள். ஒரே இருட்டுக் கசம். தூரத்துப் பார்வைக்கு – வெள்ளிகள் சிந்திய வெளிறிய ஒளியிலே – பூத உருவில் யாரோ தலைவிரித்து, நீள் கரங்களைத் தொங்கவிட்டு நிற்பதுபோல் தோன்றும். மரத்தின் தொங்கும் விழுதுகள் நெளியும் நாகங்கள

15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்_சிங்கம்.pdf/17&oldid=1071124" இலிருந்து மீள்விக்கப்பட்டது