பக்கம்:ஆண் சிங்கம்.pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வல்லிக்கண்ணன்

'எசமான், காரு வாறது போலத் தானிருக்கு’ என்றான் மாடசாமி.

‘காரு வறலே போலிருக்கே. அங்கேயே நிற்குதுன்னு நினைக்கிறேன். லைட்டை அணைச்சு அணச்சுப் பொறுத்துதானா?...வெறும்பய எவன்லேய் அது?’ என்று கத்தினர் பிள்ளை.

‘எசமான்!” என்று பயக்குரல் கொடுக்க நாவசைத்தான் மாடசாமி.

‘பகடகபக்'–பல்லி சிரித்தது.

‘ஏ சுருட்டு! நடுரோட்டிலே நின்றுதான் சுருட்டுக் குடிக்கனுமோ?...காரு என்ன ரிப்பேராயிட்டுதா என்று கேட்டார் இன்ஸ்பெக்டர். –

சுருட்டுப் பொறி செக்கச் செவேரிட்டு ஜொலித்தது. அதைவிட ஜோராக ‘கணகண’ வென்று நெருப்புக் கங்கு கள் போல் ஒளிர்ந்தன அந்த ஆளின் கண்கள். அவன் சிரித்தான். அந்த இருட்டில்கூட நட்சத்திரங்கள் மாதிரி டாலடித்தன பற்கள். பற்களுக்கு அவ்வித ஒளி எங்கி ருந்துதான் வந்ததோ!

பல்லி மிகவும் பலமாகச் சிரித்தது.

முத்தையபிள்ளையின் உள்ளத்தில் உதைப்பு எடுத்தது. எதிரே நின்றது மனிதனல்ல என்பது அவருக்கு நன்றாகப் புரிந்தது. அவர் என்னவோ சொல்ல நினைத்தார்.

ஆனல் சொல்லவில்லை. அந்தக் கணத்திலே பல காரியங்கள் ஒரேயடியாக நிகழ்ந்தன.

மாடசாமி பளீரென்று சாட்டையடி கொடுத்தான் வலத்தன் காளைக்கு. பளிரென ஒளி வெள்ளம் அக்காளையின் மூஞ்சியில் பட்டுத் தெறித்தது. சடக் கென மூலை திரும்பிய மோட்டாரின் ஹெட்லைட் வெளிச்சம்போல் தெரிந்தது. மாடு மிரண்டது. அடிபட்ட வெறி. கலைசல், மிரண்டு துள்ளியது. வண்டியை இழுத் துக்கொண்டு துடித்து விலகியது.அது போனப்போக்கி லேயே சென்றது ஜோடிக்காளையும்.

18