பக்கம்:ஆண் சிங்கம்.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வல்லிக்கண்ணன்

புதுசா வேறே சேர்த்துமிருக்கிறோம். புள்ளிமயிலியை வடிவழகி கொல்ல வேண்டாம். ரெண்டு பேருக்கும் வாக்குவாதம் நடக்கிற மாதிரி எழுதணும். மாஸ் மைண்டு அதை ரொம்ப் ரசிக்கும். குலேபகாவலியிலே சக்களத்தி போராட்டம், சகல பேருக்கும் கொண்டாட் டம்னு வருமே, அது மாதிரி ரொம்ப ஜோராக எழுதுங்க.”

பீர்க்கங்காய் படலம்

இரண்டு வருஷங்களுக்குப் பிறகு.

‘இன்னும் இரண்டு மாதங்களில் ‘சாகாத காதல்’ வெளியாகி விடும்’ என்று விளம்பரங்கள் கூறின.

‘முக்கால்வாசிக்கு மேலேயே முடிந்து விட்டது.இன்னும் கொஞ்சம் தானிருக்கு. கதாநாயகனுக்கு ஒரு நண்பனை சிருஷ்டிச்சு, அவனுக்கு ஒரு காதலியையும் உண்டாக்கியிருக்கிருேம். நம்ம நகைச்சுவை டிக்டேட்டர் தான் நண்பனாக நடிக்கிறார். அவர் ஜோடிதான் அவரு டைய காதலி. அவருக்குத் தேவையான கதை, வசனத்தை அவரே எழுதிக்கிட்டாரு...நீங்கள் எழுதின திலே சிலதை விட்டுவிட்டோம். சில இடங்களில் புது சாச் சேர்ந்து...படம் வந்ததும் பாருங்களேன். பிரமா தமாக இருக்கும்’ என்றார் சோணா.

‘சரிதான் என்று இழுத்தார் வசனகர்த்தா ‘கோவலன்’.

வெள்ளரி பழுத்த படலம்

இரண்டரை வருஷங்களுக்குப் பிறகு, தடயுடலாகத் திரையை எட்டிப் பார்த்தது ‘சாகாத காதல்’.

படத்தைப் பார்த்த கோவலன் தியேட்டரிலேயே மூர்ச்சை போட்டு விழாமலிருந்தது அவர் உடலின்––உள்ளத்தின் தெம்பு அதிகம் என்பதைப் புலணாக்கிற்று.

ஆரம்பத்தில் எழுதியிருந்த கதைக்கும், திரையில் வத்திருந்ததற்கும் எவ்வளவுக்கு எவ்வளவு தூரம்! எத்தகைய வித்தியாசம்! –



28