பக்கம்:ஆண் சிங்கம்.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளதுஆண் சிங்கம்

பல இடங்களில் ஒலித்த வசனம், தான் எழுதி யிருந்ததுதானா என்ற சந்தேகத்தை எழுப்பியது அவருக்கு. அவர் எழுதிக்கொடுத்த வரிகள் சில, வார்த்தைகள் பல, அங்கங்கே ஒலிக்காமற் போகவில்லை!

விஷயமறிந்த ‘கோவலன்’ முனங்கிக் கொண்டார்: ‘இங்கு மட்டுமென்ன! ஹாலிவுட்டிலும் இதே கதைதான். முதலாளிகள் வைத்தது குடுமி. அவர்களாகவே சிரைத்துவிடுவது மொட்டை உலக வழக்கமே இது. நாமென்ன செய்ய முடியும் ?’


*
29