பக்கம்:ஆண் சிங்கம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தெளிவு



வன் ஒரு கைதி.

அவன் பெயரைப்பற்றி மற்றவர்களுக்குக் கவலை கிடையாது. அவனுக்கே அவன் பெயர் மறந்து போனா லும் போயிருக்கும்.

அவன் மீது எத்தனையோ குற்றச்சாட்டுகள். அவனுக்கு கடுங்காவல் தண்டனை விதித்தது சட்டம். கம்பிகளின் பின்னே, இருட்டறையினுள் தள்ளப்பட்ட அவன் இன்னும் பல கைதிகளைப் போலவே சுரங்க வேலை செய்ய தியமிக்கப் பெற்றான்.

தங்கம் விளையும் பிரதேசத்தில், தங்கச் சுரங்கத்தை அடுத்திருத்தது அந்தச் சிறை, பூமியின் இருட் குடலினுள் புகுந்து தங்கக் கனிகளைப் பெயர்த்து, பொன் திரட்டும் பணிக்கு பல கைதிகளை தகுந்த கண்காணிப்புடன் நியமிக்கும் வழக்கம் இருந்த காலம் அது.

பூமியின் இருள் வயிறு போன்ற சுரங்கத்தினுள் அவனும் போனான். அவன் கைதி. அவனுக்குப் பெயரில்லை. ஒரு எண் இருந்தது. அறுபத்தைந்து. அந்தச் சூழ்நிலையில் அது தான் அவன் பெயர்.

எங்கோ கொண்டு வந்து நிறுத்தப்பட்ட குழந்தையைப் போல் விழித்தான் அவன். வெளியுலக வெளிச்சத்திலிருந்து இருளின் ஊற்றான பாதாளத்தில் புகுத்ததும் குருடாகிப் போனது போல் தோன்றிய கண் கள் மெதுமெதுவாக இருளில் ஒளி காணப் பழகின. சூட்டால் ஆவி கக்கி பூமிக்கடியில் நெளியும் வாயுக்ளுக்கு சூடேற்றி வெடிக்கவோ தீ உண்டாக்கவோ துணை புரியும் செயலற்ற தனிமுறை விளக்குகள் சுரங்கத் தொழிலாளிகளுக்குச் சிறிது ஒளிகாட்ட முயன்று கொண்டிருந்தன. கண்களை மூடி மூடித் திறந்து, பார்வைக்கு இருள் பழ

30

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்_சிங்கம்.pdf/32&oldid=1071094" இலிருந்து மீள்விக்கப்பட்டது